Connect with us

Cinema News

இந்த தயாரிப்பாளருக்காக ஸ்கூட்டி ஓட்டுவதையே நிறுத்திய ரஜினிகாந்த்.. அட என்ன பாசமோ?

Rajinikanth: ரஜினிகாந்த் இளம் வயதில் ரொம்பவே துறுதுறுவென இருப்பவராம். அவர் நடிக்க வந்தாலும் சாதாரண மனிதராக வாழ்க்கை வாழ வேண்டும் என ரொம்பவே ஆசைப்பட்டவர். அப்படி ஒருமுறை அவர் செய்த விஷயத்தால் ஏவிஎம் நிறுவனரே சண்டைக்கு வந்த ஒரு சம்பவம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலத்தில் கூட ரஜினிகாந்த் தன்னை பெரிய நடிகர் என நினைக்காமல் சாதாரண ரோட்டில் நடந்து வருவது, பிடித்த இடத்துக்கு செல்வது எனத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பாராம். இப்படி ஒரு நாள் ஏவிஎம் நிறுவனத்துக்கு கதை கேட்க கூட அவர்கள் அனுப்பிய ட்ரைவரின் ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டே வந்துவிட்டார்.

இதையும் படிங்க: ‘மஞ்சுமெல் பாய்ஸ’ கொண்டாடுற நாம ஏன் இவரயும் கொண்டாடக் கூடாது? ரஜினி-கமலை மிஞ்சிய மம்மூட்டி

அந்த பயணம் அவருக்கு பிடித்து போய் விட இதனால் தொடர்ந்து ஸ்கூட்டி ஓட்டுவதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார். ஆனால் ஒருநாள் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டி கவிழ்ந்து ரஜினிக்கு முகத்தில் அடிப்பட்டு விட்டதாம். இதனால் சிகிச்சையில் இருந்த ரஜினிகாந்தை சந்திக்க நேரில் சென்று இருக்கிறார் ஏவிஎம் சரவணன்.

அவரை பார்த்த சரவணன், நான் உங்களை நடிகனாக நினைத்து சொல்லவில்லை. நீங்கள் ஒருவருக்கு கணவர், பெண் பிள்ளைகளுக்கு அப்பா, நிறைய தயாரிப்பாளர் உங்களை நம்பி இருக்கிறார்கள். உங்கள் படங்களில் இந்த நேரத்திலே ஒரு கோடி வரை முடக்கப்பட்டு இருக்கிறது. அதை யோசிக்காமல் இப்படி செய்யலாமா எனக் கேட்டாராம்.

இதையும் படிங்க: இத்தனை கோடி வசூலா?!. முதல் மலையாள திரைப்படம்!.. தமிழகத்தில் வசூலை அள்ளும் மஞ்சுமெல் பாய்ஸ்!..

Continue Reading

More in Cinema News

To Top