Connect with us
mamu

Cinema News

‘மஞ்சுமெல் பாய்ஸ’ கொண்டாடுற நாம ஏன் இவரயும் கொண்டாடக் கூடாது? ரஜினி-கமலை மிஞ்சிய மம்மூட்டி

Actor Mammootty: இன்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை மனதார கொண்டாடி வருகிறார்கள். உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை மக்களுக்கு புரியும் விதமாக பிடிக்கும் விதமாக உணர்வு பூர்வமாக எடுத்து ஒரு பெரிய ட்ரீட்டையே வைத்திருக்கிறது மலையாள சினிமா. இந்தப் படத்தின் எதிரொலிதான் இப்போது அடுத்தடுத்து மலையாள படங்களை பார்க்கும் ஆர்வத்தை வரவழைத்திருக்கிறது.

சமீபத்தில் ரிலீஸான பிரம்மயுகம் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்ற திரைப்படமாக அமைந்தது. கருப்பு நிற தோலுடன் பாக்கு போட்டு போட்டு பாழாகிய பற்களுடன் பார்க்கவே மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருப்பார் மம்மூட்டி. இதை பார்க்கும் போது ஜெயிலர் என்ற மாபெரும் ஹிட் படத்தில் நடித்த விநாயகன் கேரக்டருக்கு பதிலாக மம்மூட்டி நடித்திருந்தால் இதைவிட பெரிய வெற்றி கிடைத்திருக்குமே என்றுதான் தோன்றியது. அப்படி ஒரு கெட்டப்பில் பிரம்மயுகம் படத்தில் நடித்திருந்தார் மம்மூக்கா.

இதையும் படிங்க: அப்ப அப்ப வில்லனாக மாறிடுறீங்களே கோபி.. பாக்கியா பங்ஷனை காலி செய்த செம திட்டமால இருக்கு!

இந்த நிலையில் மம்மூட்டியை பற்றி ஒரு சில பேருக்கு மட்டுமே தெரிந்த பல பேருக்கு தெரியாத சில செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மலையாள சூப்பர் ஸ்டார் என்ற மமதையை ஒரே நாள் இரவில் ஒரு பெரியவரால் தூக்கி எறிந்த சம்பவத்தை தனது மூன்றாம் பிறை என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறாராம் மம்மூட்டி. காரை அவரே ஒட்டிக் கொண்டு போக திடீரென ஒரு கர்ப்பிணி பெண் மம்மூட்டி காரின் மீது விழுந்திருக்கிறார். உடனே காரை நிறுத்திய மம்மூட்டி இறங்கி வர அருகில் இருந்து ஒரு பெரியவரும் மம்மூட்டியின் பக்கத்தில் வந்து யாருமே காரை நிறுத்தவில்லை. அதனால்தான் நான் தள்ளி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு இவர்களை காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையை நோக்கி பயணப்பட்ட மம்மூட்டியின் மனதில் ‘ நம்மை பற்றி யாரென்று இவருக்கு தெரியாதா? ஒன்றுமே பேசாமல் வருகிறாரே’ என்று எண்ணி மருத்துவமனைக்குள் நுழைந்து இறக்கி விட்டு பின் திரும்பும் போது அந்த பெரியவர் ஓடி வந்து தன்னிடம் இருந்த கிழிந்த இரண்டு ரூபாய் நோட்டை கொடுத்து போகும் போது டீ சாப்பிட்டுக் கொள். இதுதான் இருக்கின்றது என்று கூறி கொடுத்தாராம்.

இதையும் படிங்க: ஹீரோயின்னு ஃபிக்ஸ் பண்ணதுக்கு பிறகு எதுக்கு இந்த டெஸ்ட்? சிம்பு செஞ்ச வேலைய பாருங்க

அதை வாங்கிக் கொண்ட மம்மூட்டி, 4 தேசிய விருதுகளை வென்ற நடிகன் என்ற மமதையை அந்த பெரியவர் சுக்கு நூறாக உடைத்துவிட்டார் என்றும் நடிகன் என்றால் அனைவருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் உதவி செய்தால் உலகம் நம்மை மதிக்கும் என்றும் அன்று புரிந்து கொண்டாராம் மம்மூட்டி. அதில் இருந்தே அந்த தேசிய விருதுகள் இருக்கும் இடத்தில் அந்த பெரியவர் கொடுத்த இரண்டு ரூபாய் நோட்டைத்தான் தன் வீட்டில் வைத்திருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் தன் மனைவியிடமும் அதிக அன்பு கொண்டவராம். ஒரு வக்கீலாக இருந்த போது தான் என் மனைவியை கரம் பிடித்தாராம். அதனால் இன்று வரை ஒரு நடிகனாக இல்லாமல் சாதாரண மனிதனாகத்தான் அவரிடம் பழகி வருகிறாராம். மனைவிக்கு விறகு எரித்து சமையல் செய்வதுதான் பிடிக்குமாம். அதனால் இன்றுவரை இவருடைய வீட்டில் கேஸ் பயன்படுத்துவதே இல்லையாம். அதே போல் நம்மூர் ரஜினி- கமலை மாதிரி மம்மூட்டி – மோகன்லால் நட்பும் மிகவும் கண்ணியமாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: எவ்வளவோ படம் கைவிட்டு போச்சு.. இந்த ரெண்டு படத்துல மட்டும் நடிச்சிருந்தா? மாஸை லாஸ் செய்த அஜித்

தன் பிள்ளைகள் திருமணத்தில் மம்மூட்டியும் மோகன்லாலும் ஒரே மாதிரி உடையணிந்துதான் மற்றவர்களுக்கு உணவு பரிமாறினார்களாம். எந்தவொரு ஈகோவும் இல்லாத நடிகர் மம்மூட்டி. 72 வயதிலும் நடிப்பையும் தாண்டி தன் உடல், குடும்பம், பிள்ளைகள் என எல்லா விஷயத்திலும் மிகவும் அக்கறையுள்ளவராகவே இருந்து வருகிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top