Connect with us

Cinema News

அப்ப அப்ப வில்லனாக மாறிடுறீங்களே கோபி.. பாக்கியா பங்ஷனை காலி செய்த செம திட்டமால இருக்கு!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியும் அவர் நண்பர் செந்திலும் ரெஸ்டாரண்டில் சந்தித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது செந்திலுக்கு அவருடைய உறவினர் கால் செய்து பள்ளி ஆண்டு விழாவிற்கு சுகாதாரத் துறை அமைச்சரை கூப்பிட ஏதாவது உதவி செய்ய முடியுமா என கேட்கிறார்.

அமைச்சரை இந்த ஃபங்ஷனுக்கு அனுப்பி விட்டால் பாக்கிய பங்ஷனுக்கு வரமாட்டார். இதனால் பாக்யாவை அவமானப்படுத்திவிடலாம் என பிளான் செய்யும் கோபி தனக்குத் தெரிந்த வட்டாரத்தின் அமைச்சரின் பிஏ நம்பரை வாங்கி விடுகிறார்.

இதையும் படிங்க: ஆனந்த் அம்பானி திருமண விழாவுக்கு ஜம்முன்னு ரெடியான ரஜினி குடும்பம்!.. வைரலாகும் போட்டோவை பாருங்க!..

பின்னர் செந்தில் அழைத்துக் கொண்டு போய் பிஏவை நேரில் சந்தித்து பாக்யா ரெஸ்டாரன்ட் திறக்கும் அதே நாளில் பள்ளி ஆண்டு விழா ஒன்று இருப்பதும் அமைச்சர் வரவேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார். பி ஏ அந்த நாளில் வேறொரு நிகழ்ச்சி இருப்பதாக கூறி விடுகிறார்.

இருந்தும் கோபி உங்களுக்கு எதுவும் கமிஷன் தருகிறேன் என பிஏவை நைசாக பேசி ஒப்புக்கொள்ள வைக்கிறார். இதனால் குறிப்பிட்ட அந்த நாளில் செந்தில் உறவினர் பங்க்ஷனில் அமைச்சரை அழைத்து வருகிறேன் என பி ஏ வாக்குறுதி கொடுக்க கோபி வெற்றி மிதப்பில் வீட்டுக்கு கிளம்புகிறார்.

வீட்டில் யாருக்கெல்லாம் ரெஸ்டாரன்ட் பத்திரிகை வைப்பது என பேசிக் கொண்டிருக்க அப்பொழுது கோபி உள்ளே நுழைகிறார். ராமமூர்த்தி போனில் தன் மருமகள் குறித்து பெருமிதமாக கூறிக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பாகும் கோபி அன்னைக்கு அமைச்சர் வந்துருவாங்க என நக்கலாக பேசிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: ஹீரோயின்னு ஃபிக்ஸ் பண்ணதுக்கு பிறகு எதுக்கு இந்த டெஸ்ட்? சிம்பு செஞ்ச வேலைய பாருங்க

என் ஆரம்பக்கட்ட வளர்ச்சியில் இருந்து இப்போது வரை எனக்கு நீங்க தான் நிறைய துணையாக இருந்து இருக்கீங்க. அதுக்காக தான் கூப்பிடுறேன். வரதும் வராம இருக்கதும் உங்க விருப்பம் எனக் கூறிவிட்டு செல்கிறார். பின்னர் ஜெனிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பாக்கியா என் விருப்பம் போல் செய். எப்பவும் நான் உனக்கு துணையா இருப்பேன் எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top