டிராப்பானதா அல்லு அர்ஜுனின் AA23?… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்!

X
டிராப்பானதா அல்லு அர்ஜுனின் AA23?… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்!

நடிகர் அல்லு அர்ஜுன் தன் கைவசம் ‘ராக்கா’ மற்றும் ‘AA23’ என இரண்டு படங்கள் வைத்திருக்கிறார். இதில் அட்லீ இயக்கும் ‘ராக்கா’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

‘AA23’ படத்தை ஆக்ஷன் படங்களை விரும்பி பண்ணும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவிருக்கிறார். இதை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, இதுக்கு அனிருத் ரவிச்சந்தர் தான் இசை அமைக்கப் போகிறார்.

கடந்த சில நாட்கள் ஆக இப்படத்தின் மூலக்கதை பிடித்திருந்த அளவுக்கு, லோகேஷ் கனகராஜ் கொடுத்த முழு ஸ்கிரிப்ட்டும் அல்லு அர்ஜுனுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், இதனால் இது டிராப்பாகி விட்டதாகவும் தகவல் பரவி வந்தது.

இப்போது இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் அல்லு அர்ஜுனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஷேர் செய்து “AA23 படத்தின் சுவாரஸ்யமான அப்டேட்ஸ் விரைவில் வரும்” என்று பதிவிட்டுள்ளார்.