ஒர் நாளைக்கு ஒரு கோடி!.. தனுஷ் சம்பளம் எங்கயோ போயிடுச்சி!…

X
ஒர் நாளைக்கு ஒரு கோடி!.. தனுஷ் சம்பளம் எங்கயோ போயிடுச்சி!…

துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறியவர்தான் நடிகர் தனுஷ்.

ஒருபக்கம் கமர்சியல் மசாலா திரைப்படங்களில் நடித்தாலும் மறுபக்கம் நடிப்புக்கு தீனி போடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் நடித்து தேசிய விருதுகளை தொடர்ந்து வாங்கி வருகிறார் தனுஷ். அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க துவங்கியிருக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில்தான், தனுஷ் ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. அதாவது அதிகபட்சம் ஒரு படத்திற்கு 65 நாட்கள் வரை அவர் கால்ஷீட் கொடுப்பதாகவும் அதற்கு ரூ.65 கோடி வரை அவர் சம்பளமாக வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது.