‘நூறு சாமி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் ரெடியாகி இருக்கும் புதிய படம் தான் ‘அப்பா குட்டி’.
இந்த படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ புகழ் இயக்குநர் மு.மாறன் இயக்கியிருக்கிறார். இதில் ஹீரோயின் ஆக ப்ரீத்தி அஸ்ரானி வலம் வரப் போகிறார்.
முதலில் இப்படத்தை வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இதற்கு ஒரு நாள் முன்பாக அக்டோபர் 15-ஆம் தேதி ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

தற்போது, ‘அப்பா குட்டி’ படத்தின் ரிலீஸை நவம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். இதே தேதியில் தான் தீபாவளி ஸ்பெஷலாக சூர்யாவின் ‘சீன்’ படமும் ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.







