நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற 15ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன், நெல்சன், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது படக் குழுவினர் பல சுவாரசியமான சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக ரஜினி மிகவும் கலகலப்பாக பேசினார்..
அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, ‘பொதுவாக எனக்கு Sequal பிடிக்காது.. ஏற்கனவே செய்ததில் உப்பு, காரம் சேர்த்து மறுபடியும் செய்வார்கள் என்று எனக்கு தோன்றும்.. பாட்ஷா இப்போதும் மறைந்து வாழ்கிறான்.. அவன் உயிரோடு இருப்பது வெளியே தெரிந்ததும் ஒரு பக்கம் எதிரிகள் மறுபக்கம் போலீஸ் வருகிறார்கள் என ஆர்.எம்.வீரப்பன் சார் பாட்ஷா 2-வுக்கு ஒரு நல்ல திரைக்கதை எழுதினார்.
ஆனால், எனக்கு அதில் விருப்பமில்லை என சொல்லிவிட்டேன்.
அதேபோல் பேட்ட 2 கதையுடன் கார்த்திக் சுப்பராஜ் வந்தார். விஜய் சேதுபதி என்னை பழிவாங்க வருவது போல அந்த கதையை அவர் எழுதியிருந்தார். ஆனால் அதிலும் விருப்பமில்லை. ஆனால், ஜெயிலர் 2- சீக்வலில் நிறைய சுவாரசியங்கள் இருப்பதாக எனக்கு தோன்றியது.. அதனால் நானே நெல்சனிடம் கேட்டேன்.. அவரும் அதை ஒரு சவாலாக எடுத்து படத்தை இயக்கியிருக்கிறார்’ என ரஜினி கூறியிருக்கிறார்.







