சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கி சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து முடித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற 15-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.
முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சூரஜ், கேமியோ வேடத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறார்கள். மேலும் விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் இந்த படத்தில் சிறப்பு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது..
சமீபத்தில், ஜெயிலர் 2 பட புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் படத்துல எல்லாரும் இருக்காங்க.. ஆனா தமன்னா மட்டும்தான் மிஸ்ஸிங்.. அவங்களை வச்சி ஒரு பாட்டு எடுக்கலாம் என நெல்சனிடம் கேட்டேன்.. அதுகு அவரு ‘சார் உங்களுக்கு பிடிக்கும்னு வெச்சிக்க முடியாது சார்’ னு சொல்லிட்டார்,‘எனக்கு பிடிக்கும்னு இல்லை.. ஜனங்களுக்கு பிடிக்கும்.. அதனாலதான் கேட்டேன்’ என்று சொன்னேன் என கூறினார். இதைக் கேட்டு அரங்கிலிருந்த எல்லோரும் சிரித்தனர்.
ஜெயிலர் முதல் பாகத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா நடமாடியிருந்தார். படத்தின் வெற்றிக்கு அந்த பாடலு ஒரு காரணமாக இருந்தது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய போது ‘இந்த படத்தில் தமன்னாவுடன் இணைந்து என்னை நெல்சன் ஆட வைக்க வில்லை’ என்று ஜாலியாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.







