தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஃபிலிம் மேக்கிங் பாணியை கடைப்பிடித்து வருபவர் பா.இரஞ்சித். ‘தங்கலான்’ படத்துக்கு பிறகு இவரது இயக்கத்தில் ரெண்டு படங்கள் உருவாகி வருகிறது.
ஒன்று ‘வேட்டுவம்’, இன்னொரு படம் ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’. இதில் ‘வேட்டுவம்’ படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், ஆர்யா, கலையரசன், ஷோபிதா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது.
முதலில் படத்தை வருகிற டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது, படத்தின் ரிலீஸை அடுத்த ஆண்டு (2027) பொங்கலுக்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







