சீன் போட மாட்டேன்.. அரசியலுக்கு வருவேன்!.. விஜய் சேதுபதிக்கு ஒரு ஐடியா இருக்கு!..

X
சீன் போட மாட்டேன்.. அரசியலுக்கு வருவேன்!.. விஜய் சேதுபதிக்கு ஒரு ஐடியா இருக்கு!..

தன் இயல்பான நடிப்பில் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் வில்லன், கேமியோ என எந்த வேடமானாலும் நடிக்கும் நடிகர் இவர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்த மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல் சமீபத்தில் வெளியான பத்தா திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட் அடித்திருக்கிறது.

ஒருபக்கம் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்து விஜய் ரசிகர்களுக்கும், தவெகவினருகும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது முழுக்க முழுக்க நிகழ்ச்சி தொடர்பானது மட்டுமே என விஜய் சேதுபதி விளக்கமளித்தார்.

ஒருபக்கம் விஜயை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களும் அரசியலுக்கு வரும் எண்ணத்திலும் இருக்கிறார்கள். விஜயை போலவே அவர்கள் இருவரும் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்..

அதேபோல் சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதியும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். அதோடு தமிழகத்தில் உள்ள பல ஊர்களிலும் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, எதிர்காலத்தில் விஜய் சேதுபதிக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது என சிலர் பேசத் தொடங்கி விட்டனர்.

bismi

இந்நிலையில், ஒரு யுடியூப் சேனலில் பேசிய சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி ‘சில வருடங்களுக்கு முன்பு பொறம்போக்கு படத்தில் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருந்த போது அவரை நான் சந்தித்து பேசினேன்.. அப்போது அரசியல் தொடர்பாக இருவரும் பேசிக்கொண்டிருந்த போது ‘நான் அரசியலுக்கு வருவதாக இருந்தால் இப்போது வருவேன்.. அப்போது வருவேன்.. என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன்.. உடனே வந்து விடுவேன்’ என விஜய் சேதுபதி என்னிடம் கூறினார்.

எனவே எதிர்காலத்தில் அவரும் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மற்றவர்களை ஒப்பிடும்போது விஜய் சேதுபதிக்கு சமூகத்தின் மீது அக்கறையும் இருக்கிறது’ என அவர் கூறியிருக்கிறார்.