‘அனந்தன் காடு’ படத்துக்கு பிறகு நடிகர் ஆர்யா கைவசம் இயக்குநர் நிகில் முரளி படம் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ என இரண்டு படங்கள் உள்ளது.
இதில் நிகில் முரளி இயக்கும் படம் ஆர்யாவின் சினிமா கேரியரில் 40-வது படமாம். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா என இரண்டு ஹீரோயின்ஸ் நடித்துள்ளார்கள்.
இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதனை ஆர்யாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ மூலம் தயாரிக்கிறார்.
சமீபத்தில், இதன் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது, இப்படத்திற்கு ‘ஹலோ காதல்’ என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







