உங்களுக்குதன் நான் ஸ்டார்!. இப்பவும் அதே கண்டக்டர்தான்!.. ரஜினி ஃபீலிங்!..

X
உங்களுக்குதன் நான் ஸ்டார்!. இப்பவும் அதே கண்டக்டர்தான்!.. ரஜினி ஃபீலிங்!..

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜெயிலர் 2. ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரூ.630 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே, 2ம் பாகத்தை உருவாக்க முடிவெடுத்தனர். அதே சன் பிக்சர்ஸ் தயாரித்து, நெல்சன் இயக்கி ரஜினிகாந்த் நடிக்க ஜெயிலர் 2 படம் உருவானது. இந்த படத்திற்கும் அனிருத் இசையமைத்தார்.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில்தான், ரஜினி, கலாநிதி மாறன், நெல்சன், அனிருத் என பலரும் கலந்துகொண்ட புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ரஜினி மிகவும் ஜாலியாக பேசினார்.

படப்பிடிப்பு தளத்தில் நடந்த பல சம்பவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய ரஜினி ‘எப்படி இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்கள்?’ என நெல்சன் என்னிடம் கேட்டார். ‘நான் நடிகர் என்பதை விரும்புகிறேன்.. ஆனால் அதைவிட பேருந்து நடத்துனர் வேலையை மிகவும் விரும்புகிறேன்.. 5 வருடங்கள் நான் பேருந்து நடத்துனர் வேலை செய்ததை மிஸ் பண்ணுகிறேன்..

நான் ஒரு நடிகர்.. ஸ்டார் என்பதெல்லாம் இருந்தாலும் முதலில் நான் ஒரு நடத்துனர் என்பது எனக்கு ஆழமாக ஊறிவிட்டது.. எனவே ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் என்பதை எல்லாம் என்னோடு பொருத்திக்கொள்ளவே முடியவில்லை, இப்போதும் என்னை ஒரு பேருந்து நடத்துனராகவே நினைத்துக் கொள்கிறேன்’ என அவர் பேசினார்.