‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்து கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான லேட்டஸ்ட் படம் தான் ‘பத்தா’. பாலாஜி தரணிதரன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
தற்போது, விஜய் சேதுபதி உடனடியாக தான் நடித்து ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் ‘ஸ்லம்டாக்’ படத்தை திரையரங்குகளில் களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
இப்படத்தை தெலுங்கில் பவன் கல்யாண், மகேஷ் பாபு போன்ற பல முன்னனி ஹீரோக்களை வைத்து படம் பண்ண இயக்குநர் பூரி ஜெகன்நாத் தான் இயக்கியிருக்கிறார்.
ஆல்ரெடி இதன் டீசர் வெளியாகி படத்தின் மீதான ஹைப்பை ஏற்றியது. இப்படம் வருகிற நவம்பர் மாதம் 20-ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரிலீஸ் ஆகப் போகிறதாம்.







