ஜெயிலர் 2-வின் கிளைமேக்ஸில் செம டிவிஸ்ட்!.. ரஜினி ஃபேன்ஸ் பி ரெடி!…

X
ஜெயிலர் 2-வின் கிளைமேக்ஸில் செம டிவிஸ்ட்!.. ரஜினி ஃபேன்ஸ் பி ரெடி!…

ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இந்த இரண்டாவது பாகத்தையும் தயாரித்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தை இயக்கிய நெல்சனே ஜெயிலர் 2 படத்தையும் இயக்கியுள்ளார்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும், ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, இயக்குனர் தமிழ் என பல வில்லன்கள் இருக்கிறார்கள்.வருகிற 15ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் தொடர்பான ஒரு செய்தி வெளியே கசிந்துள்ளது.

படத்தின் இறுதிக் காட்சி முடியும்போது மூன்றாம் பாகத்திற்கான லீடாக புதிய வில்லன் ஒருவர் வருவதாகவும் அந்த வில்லன் மற்றும் அவர்களின் கூட்டத்தை டைகர் முத்துவேல் பாண்டியன் எப்படி அழிக்கிறார் என்பதே மூன்றாம் வகுப்பின் கதை எனவும் சொல்லப்படுகிறது.