Bloody Romeo படத்துக்காக ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறிய நானி… வைரலாகும் வீடியோ!

X
Bloody Romeo படத்துக்காக ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறிய நானி… வைரலாகும் வீடியோ!

தெலுங்கு நடிகர் நானி நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘தி பாரடைஸ்’. இந்த படம் நானியின் தோல்விப் படங்களின் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டது.

இதை அடுத்து நானி கைவசம் ‘ப்ளடி ரோமியோ’ மற்றும் ’96’ இயக்குநர் பிரேம் குமார் படம் என இரண்டு படங்கள் தான் இருக்கிறது.

இதில் ‘ப்ளடி ரோமியோ’ திரைப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகப் போகிறது. இதை ‘சாஹோ’ இயக்குநர் சுஜீத் தான் இயக்கவிருக்கிறார்.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் டாப் கியரில் நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்திற்கான லுக் டெஸ்ட்டின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இவ்வீடியோவில் நானி செம்ம ஸ்டைலிஷ் ஆக இருக்கிறார்.