திண்டுக்கல் லியோனியின் மகன் நடித்துள்ள Delivery Boy பட ட்ரெய்லரே நல்லா இருக்கே!

X
திண்டுக்கல் லியோனியின் மகன் நடித்துள்ள Delivery Boy பட ட்ரெய்லரே நல்லா இருக்கே!

பிரபல நகைச்சுவை பட்டிமன்ற நடுவரும், பேச்சாளருமான திண்டுக்கல் லியோனிக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவருடைய மகன் தான் லியோ சிவக்குமார்.

இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் தான் ‘டெலிவரி பாய்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் நானி இயக்கியுள்ளார்.

இதில் லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், ஜென்சன் திவாகர், துஷ்யந்த் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

தற்போது, இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை வருகிற அக்டோபர் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.