முன்பதிவில் ரூ.35 கோடி!.. கூலி பட சாதனையை ஜெயிலர் 2 முறியடிக்குமா?…

X
முன்பதிவில் ரூ.35 கோடி!.. கூலி பட சாதனையை ஜெயிலர் 2 முறியடிக்குமா?…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தை அதே டீம் உருவாக்கியுள்ளது. ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற 15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவிருக்கிறது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், சூரஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

பட ரிலீசுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் முன்பதிவில் மட்டும் ஜெயிலர் 2 திரைப்படம் 35 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதன்மூலம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் முந்தைய படமான கூலியின் முதல் நாள் உலகளாவிய வசூலான 150 கோடியை ஜெயிலர் 2 முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.