தமிழ் சினிமாவில் வெளிவந்த முக்கியமான பீல் குட் திரைப்படங்களில் ஆட்டோகிராப் திரைப்படமும் ஒன்று. இந்த படத்தை இயக்குனர் சேரன் இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் கோபிகா, கனிகா, சினேகா, மல்லிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
ஒருவனின் பள்ளி, கல்லூரி காலங்களில் வரும் காதல் அனுபவங்களை அடிப்படையாக வைத்து சேரன் இந்த படத்தை உருவாக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது..
இந்த படத்தின் கதையை விஜய், விக்ரம், சூர்யா என பல நடிகர்களிடமும் சேரன் கூறினார். ஆனால் யாரும் நடிக்க முன்வரவில்லை. ஒரு கட்டத்தில் இந்த படத்தில் நடிக்க சீயான் விக்ரம் ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் நடித்த ஜெமினி திரைப்படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்ததால் ‘இப்போது என் இமேஜ் மாறிவிட்டது. ஆக்சன் ஹீரோவாக மாறிவிட்டேன்.

எனவே, இதுபோன்ற கதைகளில் இப்போது என்னால் நடிக்க முடியாது’ என சொல்லி பின் வாங்கி விட்டார். அதன் பின்னர்தான் அந்த படத்தில் சேரனே கதையின் நாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பின் பல வருடங்கள், பல படங்களில் சேரன் நடித்து ஒரு முக்கிய நடிகராக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.







