நண்பர்களிடம் பாக்கியராஜ் வாங்கிய பல்பு… எல்லாம் அந்த இசை அமைப்பாளரால்தான்!

X
நண்பர்களிடம் பாக்கியராஜ் வாங்கிய பல்பு… எல்லாம் அந்த இசை அமைப்பாளரால்தான்!


கே.பாக்கியராஜ் நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என்பதைத் தாண்டி ஒரு சில படங்களுக்கு இசை அமைத்தும் இருக்கிறார். இது அனைவரும் அறிந்த விஷயமே. இசை ஆசானாக இருந்து இளையராஜாவுக்கு இசையைக் கற்றுக் கொடுத்தவர் தீபக். பாக்கியராஜ் இசையில் உருவான சுந்தரகாண்டம் படத்துக்குக் கூட தீபக் தான் மிகச்சிறப்பாக இசை அமைத்துள்ளார். அப்படிப்பட்ட இசை அமைப்பாளரான தீபக், பாக்கியராஜிக்கு அறிமுகமானதே ஒரு தனிக்கதை.

ஆரம்பகாலத்தில மிஸ்டர் எக்ஸ்னு ஒரு நாடகத்தை பாக்கியராஜ் எழுதினார். அதுல கதாநாயகனா நடித்தது மட்டுமில்லாமல், அந்த நாடகத்தை அவரே டைரக்டும் செய்தார். அந்த நாடக வசனத்துல கொஞ்சம் பந்தாவா இருக்கட்டும்னு ஒரு ஆங்கில வரியையும் சேர்த்து இருந்தார் பாக்கியராஜ். அந்த ஆங்கில வரியை அவர் சொந்தமாக எழுதல. ஒரு புத்தகத்தில் இருந்து பார்த்து எழுதப்பட்டது.

அந்த நாடக ஒத்திகைக்கு வந்த ஒருவர், இசை அமைக்க வந்தபோது அந்த நாடக வரி எல்லாம் தப்பா இருக்குன்னு பலமுறை பாக்கியராஜிடம் சொன்னார். அப்படி பலமுறை சொன்னதும் பாக்கியராஜிக்கு கடும் கோபம் வந்தது. நான் ஒரு கதாசிரியர். ஒரு வசனம் எப்படி எழுதணும்னு கூட எனக்குத் தெரியாதா? அந்த ஆங்கில வசனத்தைப் பொருத்தவரைக்கும் அது நானா கூட எழுதல. ஒரு புத்தகத்துல இருந்து பார்த்துதான் எழுதுனேன். பத்து ரூபாய்க்கு இசை அமைக்க வந்த உங்களுக்கு என்ன ஆங்கில வசனத்தைப் பத்தி தெரியும்? அப்படின்னு எல்லாம் அந்த இசை அமைப்பாளரைப் பார்த்து கோபமாகப் பேசி விட்டார் பாக்கியராஜ்.

அவர் அப்படி பேசின உடனே அவரது நண்பர்கள் எல்லோரும் பாக்கியராஜைக் கொஞ்சம் தனியாக அழைத்தனர். இந்த இசை அமைப்பாளரை யாருன்னு நினைச்சிக்கிட்டே? அவர் ஒரு ஆங்கில புரொஃபசர். இசை அமைக்குறதுல உள்ள ஆர்வம் காரணமா இங்கே வந்துருக்காரு. அவரு ஒரு ஆங்கில வசனம் தப்புன்னு சொன்னா அதைத் திருத்திக்கோங்க. அதை விட்டுட்டு உங்களுக்கு என்ன ஆங்கிலம் தெரியும்னு அவரைப் பார்த்துக் கேட்குறீயேன்னு சொன்ன உடனே, பாக்கியராஜ் அதிர்ந்து போய்விட்டார்.

இந்த இடத்துல பாக்கியராஜோட பெருந்தன்மையைத் தான் பார்க்கணும். தான் செய்தது தவறுன்னு தெரிஞ்சவுடனே, உடனே அந்த இசை அமைப்பாளரைப் பார்த்து, சார் நான் இது ஒரு புத்தகத்தைப் பார்த்துதான் எழுதுனேன். எப்படி அது தப்பாருந்ததுன்னு தெரியல என்றார் பாக்கியராஜ். எப்பவுமே இதுமாதிரி புத்தகத்தை அச்சிடுபவர்கள் அந்தப் புத்தகத்துல ஏதாவது தப்புன்னா அந்த பிழையைத் திருத்தத்தான் அந்தப் புத்தகத்துல கடைசில பதிவு பண்ணிருப்பாங்க.

அந்தப் புத்தகத்தோட கடைசி பக்கத்தை நீங்க பார்த்தீங்களான்னு பாக்கியராஜைப் பார்த்து அந்த இசை அமைப்பாளர் கேட்டார். உடனே, அந்த தவறு அந்தப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் இடம்பெற்று இருந்ததும், அதைத் தான் சரியாகப் பார்க்கவில்லை என்பதும் பாக்கியராஜிக்குத் தெரிந்தது.

அப்படி அவருக்கு அறிமுகமான அந்த இசை அமைப்பாளர் தான் தீபக். அந்தப் பழக்கம்தான் பின்னாளில் தன்னோட ஒரு சில திரைப்படங்களுக்கு அவரை இசை அமைப்பாளராக்கவும் காரணமானது. அதே போல பாக்கியராஜ் ஒரு சில படங்களில் இசை அமைப்பாளராக பணியாற்றுவதற்கும் அன்றைய அந்த சம்பவம்தான் வித்திட்டது.