Cinema History

அப்பாவின் பேச்சைக் கேட்காத ஏவிஎம்.சரவணன்… ஆனா கிடைத்த பாராட்டைப் பாருங்க!

ஏவிஎம் நிறுவனத்தில் மாமியார் மெச்சிய மருமகள் என்ற படத்தைத் தயாரிச்சிக்கிட்டு இருந்தாங்க. ஏவிஎம்.மோட 3வது மகன் எம்.சரவணன் அந்தப் படத்துல தான் தயாரிப்பிலும், பட விநியோகத்திலும் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்தப் படம் முடியும் நேரத்துல மெய்யப்பச் செட்டியார் ஜப்பான் போக வேண்டி இருந்தது. அங்கே போனா வியாபாரம் நடக்கணுமே… என்று தன் ஆபீஸ் மேனேஜர் ரங்கநாதனையும், விநியோகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த உறவினரான பழனியப்பனையும் அழைத்தார். மாமியார் மெச்சின மருமகள் படத்தை எந்தளவுக்கு குறைந்த விலைக்கு விற்கணும்? […]

ஏவிஎம் நிறுவனத்தில் மாமியார் மெச்சிய மருமகள் என்ற படத்தைத் தயாரிச்சிக்கிட்டு இருந்தாங்க. ஏவிஎம்.மோட 3வது மகன் எம்.சரவணன் அந்தப் படத்துல தான் தயாரிப்பிலும், பட விநியோகத்திலும் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்தப் படம் முடியும் நேரத்துல மெய்யப்பச் செட்டியார் ஜப்பான் போக வேண்டி இருந்தது. அங்கே போனா வியாபாரம் நடக்கணுமே… என்று தன் ஆபீஸ் மேனேஜர் ரங்கநாதனையும், விநியோகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த உறவினரான பழனியப்பனையும் அழைத்தார்.

மாமியார் மெச்சின மருமகள் படத்தை எந்தளவுக்கு குறைந்த விலைக்கு விற்கணும்? எந்தளவு அதிக விலைக்கு விற்கணும்னு சொன்னார் மெய்யப்பச் செட்டியார். அதே நேரம் குறைந்த விலைக்குச் சொல்லும் போது சொன்னதை விட கீழே போகாம பார்த்துக்கோங்க என்று சொல்லி விட்டு ஜப்பான் போனார். இப்ப ரங்கநாதன், பழனியப்பன் இருவரும் 3 ஏரியாக்களுக்கு மெய்யப்பன் செட்டியார் குறித்து கொடுத்த அதிகபட்ச விலைக்கு விற்றுவிட்டார்கள்.

இந்த தகவல் எம்.சரவணனுக்குப் போனது. அவர் மிகப்பெரிய அதிருப்தி அடைந்தார். இவர்களைப் பார்த்து ஏன் அந்த விலைக்கு விற்றீங்க என்று கேட்டார். நான் இப்ப மார்க்கெட் முழுக்க விசாரிச்சேன். எந்தெந்த படங்கள் என்ன விலைக்கு போயிருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதனால இந்தப் படம் கூடுதல் விலைக்குப் போகும்னு தெரியுது.

அதனால நீங்க வாங்குன செக்கைத் திருப்பிக் கொடுங்க. கூடுதல் விலைக்கு விற்கலாம் என்றார். ஆனால் அவர்கள் இருவரும் இது கூடுதல் விலைன்னு தெரியவே, அவர்கள் சரவணனிடம் விளக்கம் கொடுத்தார்கள். அதுபற்றி எல்லாம் கவலைப்படாத சரவணன் தன் முடிவில் உறுதியாக இருந்து செட்டியார் குறிப்பிட்ட விலையைக் காட்டிலும் 90 ஆயிரம் ரூபாய் அதிக விலைக்கு விற்றார் சரவணன்.

அவருக்கு அப்படி ஒரு ஆனந்தம் வந்தது. அப்போது ஜப்பான்ல இருந்து மெய்யபச்செட்டியார் இந்தியாவுக்கு வந்தார். அப்பா நம்மைப் பாராட்டுவார் என்று சரவணன் எதிர்பார்த்தார். ஆனால் அவரிடம் இருந்து பாராட்டும், அழைப்பும் இல்லை. ரங்கநாதனைக் கூப்பிட்டு அப்பச்சி பாராட்டினாரா என்று கேட்டார் சரவணன். ஆனால் இல்லை என்ற பதிலே வந்தது. இது சரவணன் மனதில் குடைந்தபடியே இருந்தது.

அப்போது தெய்வப்பிறவி தயாராகி இருந்தது. அந்த நேரம் செட்டியார் அமெரிக்கா போக வேண்டி இருந்தது. மார்க்கெட்ல ஜெமினி பிக்சர்ஸின் வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை படங்கள் ரெடியாக இருந்தது. அதன் மார்க்கெட் நிலவரத்தை சரவணன் தெரிந்து கொண்டார். நான் ஊருக்கு கிளம்புறேம்பா, இந்தப் படத்தை நல்ல விலைக்கு வித்துருங்கன்னு சொல்லிவிட்டு செட்டியார் சென்றார். என்ன விலைக்கு விற்கணும்னு சொல்லலயேப்பான்னு கேட்டார் சரவணன்.

அதெல்லாம் உனக்கு தெரியாதாப்பா… நீ நல்ல விலைக்கு வித்துருன்னு சொன்னார் செட்டியார். அவர் அப்படி சொன்ன உடனே சரவணன் ஆகாயத்தில் பறந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். நேரடியான பாராட்டாக இல்லாமல் குறிப்பால் உணர்த்துவதில் வல்லவர் மெய்யப்பச் செட்டியார்.