தமிழ்த்திரை உலகில் எதையும் யாருக்கும் அஞ்சாமல் சொல்ல வந்த கருத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படையாக சொல்வதில் வல்லவர் எம்ஆர்.ராதா. அவர் நடிப்பிலும் கூட இது மிக அழகாகத் தென்படும். அந்த வகையில் அவர் அன்று சொன்ன ஒரு விஷயம் இன்று வரை அப்படியே கனகச்சிதமாக தமிழ்த்திரை உலகிற்குப் பொருந்துகிறது. வாங்க அது என்னன்னு பார்க்கலாம்.
தொழில்நுட்பத்திலும், படப்பிடிப்புக்குப் பயன்படுத்துகின்ற தொழில்நுட்ப சாதனங்களிலும் தமிழ்சினிமா மிகப்பெரிய அளவிலே முன்னேறி இருக்கிறது என்பதிலே எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கதையிலே முன்னேற்றம் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். போட்டிப் போட்டுக்கொண்டு விளம்பரத்தைப் பண்ணி படத்தை ஓட்டப் பார்க்குறே.
சொந்தக் காசுல தியேட்டர்ல டிக்கெட் வாங்கி ஹவுஸ் ஃபுல் போர்டு மாட்டி சந்தோஷப்பட்டுக்குறே. இதெல்லாம் வெட்கக்கேடு இல்லையா? இதெல்லாம் முன்னேற்றம்னு சொல்ல முடியுமா? இதை வேற யாரும் சொல்லல. நடிகவேள் எம்ஆர்.ராதாவின் கருத்து.
இந்தக் கருத்துகளை எந்தக் காலகட்டத்துல சொல்லிருக்காருன்னு தெரிஞ்சா நீங்க ஆச்சரியப்பட்டுப் போவீங்க. 1964ம் ஆண்டில் எம்ஆர்.ராதா தமிழ்சினிமாவைப் பற்றி தெரிவித்த கருத்துகள் இவை. அவர் சொல்லி 62 ஆண்டுகள் ஆகின்றன.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னாலும் அவர் அன்றைக்கு சொன்ன கருத்துகள் அப்படியே தமிழ்சினிமாவுக்குப் பொருந்திப் போவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.







