இங்கே காதல் மன்னன் ஜெமினிகணேசன்… அங்கே அடேங்கப்பா…எத்தனை காதலிகள்?!

X
இங்கே காதல் மன்னன் ஜெமினிகணேசன்… அங்கே அடேங்கப்பா…எத்தனை காதலிகள்?!

தமிழ்சினிமா கதாநாயகர்களில் காதல் மன்னனாகத் திகழ்ந்தவர் ஜெமினிகணேசன். ஆங்கில சினிமா கதாநாயகர்களில் காதல் மன்னாகத் திகழ்ந்தவர் மார்லன் பிராண்டோ. அவர் காதலித்த நடிகைகளின் பட்டியல் மிக நீளமானது. அதில் குறிப்பிடத்தக்க நடிகை மர்லின் மன்றோ. நான் திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய காலகட்டத்தில் மர்லின் மன்றோ புகழின் உச்சத்தில் இருந்தார்.

சிறந்த கதாநாயகி. அவளும், நானும் நட்பு கொண்டு இருந்தோம். அவளின் இறுதி மூச்சு வரையில் எங்களின் நட்பு நீடித்தது. அவள் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு கூட என்னிடம் டெலிபோனில் பேசினார். அவளது முடிவு இவ்வளவு சீக்கிரத்தில் முடியும்னு நான் நினைச்சிக்கூட பார்க்கல என்கிறார் மார்லன் பிராண்டோ.

Marlin brando, Marlin mandro

அவர் ஒரு காலகட்டத்தில் எலிசபெத் டெய்லரையும் காதலித்து இருக்கிறார். அவரைப் பற்றியும் இப்படி சொல்கிறார். எலிசபெத் டெய்லர் மிகத் திறமையான நடிகை. பெண்களுக்கு எந்த அழகு முக்கியமோ, அந்த அழகு அவருக்கு கொஞ்சம் சிறியதாக இருந்ததுதான் மிகப்பெரிய சோகம் என்று கிண்டலாக ஒரு பத்திரிகையில் பதிவு செய்து இருக்கிறார் மார்லின் பிராண்டோ.