Follow Us:

துருவ நட்சத்திரம் ரிலீஸுக்கு விக்ரம் எந்த உதவியும் பண்ணல!.. திருப்பூர் சுப்பிரமணியம் கோபம்!.

துருவ நட்சத்திரம் ரிலீஸுக்கு விக்ரம் எந்த உதவியும் பண்ணல!.. திருப்பூர் சுப்பிரமணியம் கோபம்!.

நடிகர்கள் தங்களுக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என கேட்காமல் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்கு என சம்பமாக பெற்றுக் வேண்டும் அப்போதுதான் படம் நஷ்டம் என்றால் தயாரிப்பாளர்களும் நஷ்டமடைய மாட்டார்கள் என தயாரிப்பாளர் சங்கம் பல வருடங்களாக கூறி வருகிறது. ஆனால் எந்த நடிகரும் அதை பின்பற்றவில்லை.

இந்நிலையில்தான், செய்தியாளர்களிடம் பேசிய திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ‘கருப்பு, சர்தார் 2 படங்களின் ரிலீஸில் சிக்கல் வந்தபோது சூர்யா, கார்த்தி இருவரும் படத்திற்கு ஆதரவு கொடுத்தனர்,. சம்பளத்தில் சில கோடிகள் விட்டுக் கொடுத்தனர். அதனால் அந்த படங்கள் வெளியானது.

ஆனால் துருவ நட்சத்திரம் போன்ற படங்களுக்கு விக்ரம் ஆதரவு கொடுக்கவில்லை. அதே சமயம் நடிகர்கள் தங்களது சொந்த தயாரிப்பு நிறுவன படங்களாக இருந்தால் மட்டுமே ஆதரவு கொடுக்கின்றனர். மற்ற படங்களுக்கு சிக்கல் ஏற்படும் போது கண்டு கொள்வதில்லை. இப்போதெல்லாம் தயாரிப்பாளர்களுக்கு உதவப் பல நடிகர்கள் முன் வருவதில்லை’ என அவர் பேசியிருக்கிறார்.