Follow Us:

ஜெயிலர் 2-வுக்கு ரஜினி வாங்கின சம்பளம்!.. படம் ஓடினா இன்னும் அதிகம்!…

ஜெயிலர் 2-வுக்கு ரஜினி வாங்கின சம்பளம்!.. படம் ஓடினா இன்னும் அதிகம்!…

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற 15ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் நிலையில் படத்திற்கு பெரிய அளவில் புரமோஷன் செய்யப்படவில்லை. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவில்லை.

ஒரு அரங்கில் நெல்சன், அனிருத், ரஜினி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரை வரவழைத்து சிறிது நேரம் பேசவைத்து விட்டு அதையே புரமோஷன் நிகழ்ச்சி என சன் டிவியில் போட்டார்கள். அதற்கு பெரிய வரவேற்பும் இல்லை.

ஆனாலும் ஜெயிலர் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்ததால் இரண்டாம் மகன் எப்படியும் வெற்றி பெறும் என இந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் நம்புகிறது. ரஜினியும் நம்புகிறார்..

இந்நிலையில்தான் ஜெயிலர் 2 படத்தில் நடித்ததற்காக ரஜினிகாந்துக்கு 110 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது மேலும் படத்தின் லாபத்திலும் ரஜினிகாந்த்துக்கு பங்கு இருப்பதாக கூறப்படும் நிலையில் படம் பாக்ஸ் ஆபீசில் பெற்று எடுத்து வசூலை பெற்றால் அவரின் மொத்த வருமானம் ரூ.170 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது.