ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற 15ம் தேதி வெளியாகவிருக்கிறது. ஜெயிலர் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் 2ம் பாகத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. முதல் பாகத்தை உருவாக்கிய சன் பிக்சர்ஸ், நெல்சன், அனிருத் என அந்த அந்த டீம் அப்படியே மீண்டும் இணைந்திருக்கிறது.
முதல் பாகம் போலவே 2ம் பாகத்திலும் அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஜெயிலர் 2 படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் சமீபத்தில் ரஜினி, நெல்சன், கலாநிதி மாறன், அனிருத், எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன் போன்ற படக்குழு கலந்துகொண்ட புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இது படத்திற்கு நல்ல புரமோஷனாக அமைந்துவிட்டது. வழக்கமாக காலை 5 மணிக்கெல்லாம் FDFS என்கிற பெயரில் சிறப்பு காட்சியை திரையிடுவார்கள். ஆனால், தவெக ஆட்சிக்கு வந்தபின் பொதுவாக எல்லா படங்களுக்கும் சிறப்புக்காட்சிக்காண அனுமதி காலை 9 மணிக்கு மாற்றப்பட்டது. ஜெயிலர் 2-வுக்கும் காலை 9 மணிக்குதான் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால்,சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் காலை 8 மற்றும் 8.30 மணிகு சிறப்புக்காட்சியை திரையிடப்போகிறார்களாம். இதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.















