தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஃபிலிம்மேக்கிங் ஸ்டைலை ஃபாலோ பண்ணி படம் இயக்குபவர் மிஷ்கின்.
இவர் ஆல்ரெடி சில மாதங்களுக்கு முன்பே இரண்டு புதிய படங்களை இயக்கி அனைத்து வேலைகளையும் முடித்து விட்டார். இதில் ஒரு படம் ஆண்ட்ரியா ஹீரோயின் ஆக நடித்திருக்கும் ‘பிசாசு 2’.
இன்னொரு படம் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதாநாயகன் ஆக நடித்திருக்கும் ‘ட்ரெயின்’. இதில் முக்கிய வேடங்களில் நரேன், நாசர், ஸ்ருதிஹாசன், கலையரசன், கே.எஸ்.ரவிகுமார், சம்பத் ராஜ், ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது, இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மிஷ்கினே எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறதாம்.















