நீ தங்குவியாடா இந்த வீட்ல! விஜய்க்கு எதிராக கிளம்பிய சூர்யா ரசிகர்!.. இன்னொருத்தர் சொன்னதுதான் தரம்!

Published on: March 7, 2024
---Advertisement---

தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பத்தில் உள்ள நடிகர் விஜய் அரசியலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் ஏழைகளுக்கு வீடுகளை கட்டி தராமல், அதற்கு முன்னதாகவே விலையில்லா வீடு என்கிற திட்டத்தின் கீழ் இன்று ஏழை மக்களுக்கு சுமார் ஏழு வீடுகளை தானமாக வழங்கியுள்ளார்.

கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் வெளிநாட்டில் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், அவர் சார்பில் புஸ்ஸி ஆனந்த் இந்த வீடுகளை வழங்கி உள்ளார்.

இதையும் படிங்க: ஏய் சூரி சூப்பரப்பு!.. ஸ்கூல் பசங்கள பார்த்து அப்படியொரு வார்த்தை.. மாணவர்கள் முகமெல்லாம் சந்தோஷம்!

ஆனால் அந்த வீட்டை பார்த்த ரசிகர்கள், இதுக்கு பேரு வீடா என்றும் பொட்டிக்கடை இதைவிட பெருசா இருக்கும், அந்த ரெண்டு கம்பை தூக்கிட்டா வீட்டுக்கு சப்போர்ட் இருக்காது போல என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மேலும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான மாவீரன் திரைப்படத்தின் காட்சியை வெளியிட்டு, நீ தாங்குவியாடா இந்த வீட்ல என சூர்யா ரசிகர்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

 

இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக சூர்யா ரசிகர் ஒருவர் தற்போது, குடிசையில இருந்தவர்களுக்கு இதுவே மாட மாளிகை கோபுரம் தான்டா..  அமைதியா உக்கருங்கடா .. அவுங்களுக்குன்னு இருந்த இடத்தை வெச்சு இவுங்களால முடிந்ததை பண்ணி கொடுத்திருக்கங்க.. பாராட்டுலனாலும் பரவால கேவலப்படுத்தாதிங்க … என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மகேஷ்பாபுவுக்கு ராஜமவுலி போட்ட கறார் கண்டிஷன்!.. கொஞ்சம் ஓவராத்தான் போறாரு!..

விலையில்லா வீடு கொடுக்கவும் ஒரு மனசு வேண்டும் என்றும் அந்த இடம் அவங்களுக்கு சொந்த இடமாக மாறினால் நல்லது தான் என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர். புயல், மழை வரட்டும் வீடு அதே இடத்துல இருக்கா? இல்லை காத்துல பறக்குதான்னு பார்க்கத்தானே போறோம் என தொடர்ந்து அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

https://twitter.com/Raj_twetz/status/1765665858280362421

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.