Entertainment News
சைனிங் உடம்பை பார்த்தா என்னமோ பண்ணுது!.. விதவிதமா காட்டி சூடேத்தும் பிரியாமணி..
பெங்களூரில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பிரியாமணி. அதுவும் முதல் படமே பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்தார். கண்களால் கைது செய் என்கிற அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனாலும் தமிழில் தொடர்ந்து நடிக்க துவங்கினார்.
பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனாக்காலம் படத்திலும் நடித்திருந்தார். இப்படி பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இது ஒரு பேட்டியிலேயே வருத்தத்துடன் கூறியிருந்தார்.
அமீரின் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் முத்தழகாக வாழ்ந்து காட்டி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். ஆனால், அதன்பின்னரும் அவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. சில வருடங்கள் பார்த்துவிட்டு தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார்.
அதிலும், தெலுங்கில் மார்க்கெட்டை பிடிப்பதற்காக நீச்சல் உடையெல்லாம் அணிந்து கொண்டு நடித்து ரசிகர்களை அதிரவிட்டார். ஒரு கட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின் டிவியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜ்ஜாக போனார்.
கடந்த சில வருடங்களாக மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். சின்ன வேடம் என்றாலும் நடிக்க ஒப்புக்கொள்கிறார். அப்படித்தான் ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்திருந்தார்.
ஒருபக்கம், கட்டழகை வேறலெவலில் காண்பித்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், புடவையில் கியூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கி வருகிறது.