Cinema History
இரண்டு பெயரை கொடுத்த சிவாஜி ராவ்… மறுத்த கே.பாலசந்தர்.. ரஜினிகாந்த் உருவானதன் பின்னணி?
Rajinikanth: கண்டக்டராக வேலை செய்த போது சிவாஜி ராவ் கெய்வாட்டாக இருந்தவர் சினிமாவில் அறிமுகமாகும் போது ரஜினிகாந்தாக மாறிய சுவாரஸ்ய பின்னணி குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரஜினிகாந்தின் முதல் திரைப்படமான அபூர்வ ராகங்கள் 1975 ஆகஸ்ட் 15ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. இதனால் டைட்டில் கார்ட் ரெடி செய்யும் வேலைகளும் தொடங்கப்பட்டது. உடனே பாலசந்தர் ரஜினியை அழைத்தாராம். உன்னுடைய பெயரை மாற்ற வேண்டும். ஏற்கனவே சிவாஜி என்று கோலிவுட்டில் ஒருவர் இருக்கார். ராவ் இங்கு செட்டாகாவும் எனவும் காரணமாக சொன்னாராம்.
இதையும் படிங்க: பாரதிராஜாவிடம் ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. கடைசி வரை நிறைவேறாமல் போன சோகம்!…
ரஜினிகாந்தை எதுவும் பெயர் யோசித்து வரும் படி கூறி அனுப்புகிறார். அவர் பாலசந்தரை எதுவும் நல்ல பெயராக நீங்களும் யோசித்து வையுங்கள் எனக் கூறி விட்டு பெங்களூர் நண்பர்களிடம் வருகிறார். சரத் இல்லை ஆர்.எஸ்.கெய்க்வாட் என்ற இரண்டு பெயர்களை ரஜினிகாந்த் சொல்ல அவர்கள் நல்லா இல்லை என்கின்றனர்.
அவர்களை போல கே.பாலசந்தரும் இரண்டு பெயரையும் மறுத்துவிட்டாராம். இதை தொடர்ந்து ரஜினி நீங்களே அப்போ சொல்லுங்கள் எனக் கேட்கிறார். பாலசந்தரின் மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில், சந்திரகாந்துக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பார்கள். அதில், ஒருவன் ஸ்ரீகாந்த், இன்னொருவன் பெயர் ரஜினிகாந்த்.
இதையும் படிங்க: வாய்ப்பு கிடைக்காமல் ஹோட்டலில் வேலை செய்த சமுத்திரக்கனி!.. அங்க நடந்ததுதான் ஹைலைட்!..
ஏற்கனவே ஸ்ரீகாந்த் என்ற நடிகர் இருப்பதால் ரஜினிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என ரொம்ப நாளா யோசித்தேன். அதை உனக்கு வைக்கிறேன் என ரஜினிகாந்த் என பெயர் வைத்தாராம். இதனால் சந்தோஷமான ரஜினி, நான் பெரிய வில்லனா வரணும்னு ஆசீர்வாதம் செய்யுங்க சார் எனக் கேட்கிறார். ஆனால் பாலசந்தர் ஏன் அப்படி சொல்ற? நீ பெரிய நடிகனா வருவ பாரு என முதல் படத்திலே ஆரூடம் சொல்லி இருந்தாராம்.
இதையும் படிங்க: ஸ்ரீவித்யாவுடன் ரொமான்ஸ் செய்த ரஜினிகாந்த்… டப்பிங்கில் குழம்பிய ஆச்சரியம்!…