Connect with us

Cinema History

ஸ்ரீவித்யாவுடன் ரொமான்ஸ் செய்த ரஜினிகாந்த்… டப்பிங்கில் குழம்பிய ஆச்சரியம்!…

Rajinikanth: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படமான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நிறைய ஆச்சரிய விஷயங்கள் நடந்து இருக்கிறது. அதுகுறித்த சில சுவாரஸ்ய தகவலும் வெளியாகி இருக்கிறது.

கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீவித்யா நடிப்பில் உருவான திரைப்படம் அபூர்வ ராகங்கள். இப்படத்தில் ரஜினிக்கு முக்கிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் முதல் படமே ரசிகர்களிடம் அவரின் நடிப்பை கொண்டு சென்றது. மேலும் இப்படம் நடிக்கும் போது ரஜினிக்கு தமிழே தெரியாதாம்.

இதையும் படிங்க: பாரதிராஜாவிடம் ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. கடைசி வரை நிறைவேறாமல் போன சோகம்!…

அதனால் வேறு யாரையும் டப்பிங் போட்டுக்கொள்ள கேட்க பாலசந்தர் மறுத்துவிட்டாராம். இதனால் கே.பாலசந்தர் வார்த்தைகளை சொல்ல அதை உள்வாங்கி சொல்லியே ரஜினிகாந்த் தன்னுடைய டப்பிங்கை முடித்தாராம். மேலும் படத்தில் ஸ்ரீவித்யாவுடன் ஒரு காதல் காட்சி இடம் பெற்று இருக்கும்.

இரண்டு பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடித்தப்படி நடக்க வேண்டும். அக்காட்சியில் வசனம் இல்லாமல் வெறும் உதட்டசைவு மட்டுமே காட்டப்படும். இதனால் பாலசந்தர் உங்க இஷ்டப்படி பேசிக்கோங்க எனக் கூறிவிட்டாராம். ரஜினி கன்னடத்தில் பேச, ஸ்ரீவித்யாவோ மலையாளத்தில் பேசியப்படியே வந்தார்களாம். அதுதான் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்த கடைசி காட்சி.

இதையும் படிங்க: அஜித்துக்கு எங்கடா அறுவை சிகிச்சை நடந்துச்சு? இதுக்கு நீங்க பிச்ச எடுக்கலாம்.. பொளந்து கட்டிய பிரபலம்

டப்பிங் பேச ஜெமினி ஸ்டூடியோவுக்கு ரஜினி சென்றாராம். அப்போது கமல் மற்றும் ஸ்ரீவித்யா டப்பிங்கில் இருந்தனர். ரஜினி தன் முறைக்காக காத்திருந்தாராம். திடீரென திரையில் கோட்டு போட்டு ஒரு ஆசாமி கதவைத் திறந்து கொண்டு வந்தானாம். அவரை பார்த்த ரஜினிக்கு யார் இது என ஒரு கணம் குழம்பிவிட்டதாம். அதன் பின்னர் தான் அது தான் என புரிந்துக்கொண்டாராம்.

டப்பிங்கை மறந்து அந்த காட்சியையே பார்த்துக்கொண்டு இருந்தாராம் ரஜினி. இந்த காட்சிக்கு தானே இத்தனை போராட்டம். தன்னுடைய நடிப்பை திரையில் பார்த்த திருப்தி அவர் கண்ணில் தெரிந்ததாம். இதை கவனித்த டைரக்டர் பாலசந்தர், போதும், வசனத்தை தொடங்கலாமா? என்றாராம். அங்கு தொடங்கிய ஆட்டம் இங்கு வரை வந்திருப்பது தான் நிஜம் என்கின்றனர் ரசிகர்கள்.

இதையும் படிங்க: வாய்ப்பு கிடைக்காமல் ஹோட்டலில் வேலை செய்த சமுத்திரக்கனி!.. அங்க நடந்ததுதான் ஹைலைட்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top