Connect with us
ajith

Cinema News

விஜய் மாதிரி அஜித் இல்ல.. வெறும் பில்டப்.. சும்மா நிறுத்துங்கடா!.. பொங்கியெழுந்த காமெடி நடிகர்….

சமீபத்தில் தான் அஜித் அவருடைய அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியானது. காது மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகளில் சிறியதாக வீக்கம் இருந்ததனால் அதை உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கூற இரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருந்து அறுவை சிகிச்சையை செய்து கொண்டு அஜித் வீடு திரும்பியிருக்கிறார்.

இந்த இரண்டு நாட்களும் அஜித்தை பற்றி உலா வந்த செய்திகள் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரசிகர்களை சந்திக்கவில்லை என்றாலும் பொது இடங்களுக்கு அஜித் வருவது இல்லை என்றாலும் அவருக்கு உண்டான அந்த அன்பையும் பாசத்தையும் ரசிகர்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வருகிறார்கள்.

இதையும் படிங்க: வடிவேலு செஞ்ச காரியத்துக்கு அரிவாளை தூக்கி வெட்டப் போன நடிகர்! இந்தளவுக்கு நடந்திருக்கா?

எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு ஆழமான அன்பை அஜித்துக்கு மட்டும் தொடர்ந்து ரசிகர்கள் கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். அஜித்தை பற்றி யார் என்ன சொன்னாலும் அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரவர் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விடுகின்றனர். இன்னும் ஒரு படி மேலாக அஜித்தை பற்றி யாரெல்லாம் என்ன சொன்னார்களோ அவர்களுக்கு ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும் ஒட்டி விடுகின்றனர்.

அப்படித்தான் ஒரு நிகழ்வு சமீபத்தில் கூட நடந்தது. வலைப்பேச்சு அந்தணன் அஜித்தை புறக்கணிப்போம் என்ற ஒரு தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது வெளியானது முதல் அஜித் ரசிகர்கள் அந்தணனை சமூக வலைதளங்களில் வச்சு செய்தனர்.

இதையும் படிங்க: அஜித்தின் தற்போதைய நிலைமை என்ன?.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ!…

அந்த அளவுக்கு அஜித் ரசிகர்கள் அஜித் மீது தீவிர வெறியுடன் வெறித்தனமான அன்புடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் ஜெயமணி அஜித்தை பற்றி கண்டபடி பேசி இருக்கிறார். விஜய் அளவுக்கு எல்லாம் அஜித் இல்லை என்றும் அஜித் அஜித் என ஏன் அலைகிறீர்கள் என்றும் அந்த அஜித் யார் என்றும் கோபமுடன் கேட்டிருக்கிறார்.

எதற்குமே வரமாட்டார். மக்களுக்காக எதையும் செய்ய மாட்டார். ஆனால் செய்திகளில் அவர் ரகசியமாக செய்கிறார் என சும்மா புரளியை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அஜித். என்ன ஹீரோ அவர்? அஜித் ரசிகர்கள் என்னை என்ன செய்தாலும் பரவாயில்லை.

jaya

jaya

இதையும் படிங்க: குடிச்சு கூத்தடிக்கிறது ஒரு படமா? மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்த பிரபலம்

பொறுப்புள்ள இடத்தில் இருக்கும் ஒருவர். தகுந்த மரியாதை உடன் இருக்கும் ஒரு நபர் என்ன செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் ரியாக்ட் செய்ய வேண்டும். சக நடிகர்களுடன் எல்லாம் சகஜமாக பழகுவார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அது எல்லாம் பொய் .திருப்பதி படத்தில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அந்த மாதிரி டைப்பே கிடையாது அஜித். பார்த்தால் முறைப்பார் என ஜெயமணி கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top