Connect with us
msv

Cinema News

ஒரு பாட்டுக்கு ஆறு மாசமா டியூன் போட்ட எம்.எஸ்.வி.. அந்த பாட்டுக்காகவே படம் ஹிட்!…

தமிழ் சினிமாவில் பாட்டு என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயம். பல பேர் துன்பங்களிலிருந்து விடுபட அவர்களுக்கு பிடித்தமான பாடலைக் கேட்டு தான் அவர்களுடைய துன்பங்களை போக்கிக் கொள்கிறார்கள். இன்றளவும் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் தான் பல பேருக்கு மருந்தாக பயன்பட்டு வருகின்றது.

இளையராஜாவுக்கு முன்பு வரை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையில் அமைந்த பாடலை தான் அந்த காலத்தில் அனைவரும் கேட்டு மகிழ்ந்தனர். தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இருந்து இவர் பெயரை மட்டும் நம்மால் அவ்வளவு எளிதாக அழித்து விட முடியாது.

இதையும் படிங்க: சினிமால கூட இப்படி காட்டலயே!.. வேறலெவலில் காட்டி கிறங்கவைக்கும் ராஷி கண்ணா…

இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்த பிறகு தான் இசை என்றால் இவ்வளவு இனிமையாக இருக்குமா? என்ற ஒரு ஆச்சரியத்தை வரவழைத்தது. இவர் இசையமைக்கும் வேகத்தை பார்த்து தயாரிப்பாளர்கள் அனைவரும் அதிசயத்து போனார்கள். இவருடன் சேர்ந்து இவருடைய நண்பர் ராமமூர்த்தியும் இணைய தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் இசையால் ரசிகர்களை கட்டிப் போட்டனர்.

இருவரும் சேர்ந்து எக்கச்சக்கமான வெற்றி பாடல்களை கொடுத்து வரும் நிலையில் இருவருக்கும் இடையில் ஒரு கட்டத்திற்கு மேல் பிரிவு ஏற்பட இருவரும் தனித்தனியாக இசையமைக்க தொடங்கினார்கள். அப்படி இருவரும் சேர்ந்து இசையமைத்த பாடலில் மாபெரும் வெற்றி பெற்ற பாடலாக அமைந்தது நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் அமைந்த நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடல்.

இதையும் படிங்க: பிடிக்கலனா போங்க! வேற ஹீரோவ வச்சு சக்சஸ் பண்ணி காட்டுறேன்.. கார்த்திக்கிடம் சவால் விட்ட இயக்குனர்!

இந்தப் படம் அந்த காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அதுவும் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்த படம் காதலின் ஆழத்தை மிகவும் வித்தியாசமாக காண்பித்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு அந்தப் பாடலும் ஒருவகையில் காரணமாக அமைந்தன.

இந்த அளவுக்கு வெற்றி பெற காரணம் என்ன என்பது இப்போதுதான் தெரிகின்றது. இந்த ஒரு பாடலை இசை அமைக்க விஸ்வநாதன் ஆறு மாதம் காலம் எடுத்துக் கொண்டாராம். கிட்டத்தட்ட 250 டியூன்கள் போட்டும் ஸ்ரீதருக்கு எதிலுமே உடன்பாடு இல்லையாம். அதன் பிறகு தான் இந்த ஒரு டியூனில் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை பிரபல சினிமா பத்திரிக்கையாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவின் முதல் சயின்ஸ் பிக்சன் படம்!.. பாடலில் பட்டைய கிளப்பிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!..

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top