Connect with us
karthick

Cinema History

பிடிக்கலனா போங்க! வேற ஹீரோவ வச்சு சக்சஸ் பண்ணி காட்டுறேன்.. கார்த்திக்கிடம் சவால் விட்ட இயக்குனர்!

Actor Karthick: அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். அந்தப் படத்தில் மீசை இல்லாத ஒரு பருவ இளைஞனாக நடித்திருப்பார் கார்த்திக். முதல் படத்திலிலேயே தன் அப்பாவையும் மிஞ்சிய நடிப்பில் நடித்து அசத்தி இருப்பார். அவரை இந்த தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை பாரதிராஜாவையே சேரும்.

அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கார்த்திக்கு கிடைத்தது. ஆனால் தொடர்ந்து அவரால் வெற்றி படங்களை கொடுக்க முடியவில்லை. நீண்ட நாள் கழித்து மௌன ராகம் என்ற படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்திருப்பார் கார்த்திக்.

இதையும் படிங்க:அஜித் சிகிச்சையில் இவ்ளோ ரிஸ்க்கா? இல்லைனா அந்தப் பிரபலத்துக்கு நேர்ந்த கதிதான் இவருக்கும்

கொஞ்ச நேரம் வந்தாலும் ரசிகர்களின் மனதில் முழுவதுமாக பதிந்தார் கார்த்திக். அந்த அளவுக்கு அந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்தார் கார்த்திக்.

நவரச நாயகன் என்று மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கார்த்திக்கு இன்று வரை ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் விக்ரமன் கார்த்திக் பற்றிய ஒரு தகவலை பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: இப்படியெல்லாம் காட்டினா ஏங்கி போயிடுவோம்!.. தாராள கவர்ச்சியில் தவிக்கவிட்ட ரேஷ்மா!..

கார்த்திக் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். ஆனால் அந்தப் படத்தில் முதலில் கார்த்திக் நடிப்பதற்கு விருப்பமே இல்லாமல் இருந்தாராம். படப்பிடிப்பில் புலம்பிக் கொண்டிருந்த கார்த்திக்கிடம் விக்ரமன் உங்களுக்கு என்னதான் பிரச்சனை என கேட்டிருக்கிறார்.

அதற்கு கார்த்திக் இந்த படத்தின் கதை நந்தவன தேரு படத்தின் கதை போல இருக்கிறது. அதனால் மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு விக்ரமன் அந்த படத்தின் கதை வேறு .இந்த படத்தின் கதை வேறு. இது கண்டிப்பாக வெற்றி அடையும்.அதற்கு மேலும் உங்களுக்கு இது திருப்தி இல்லை என்றால் நான் வேறொரு ஹீரோவை வைத்து இந்தப் படத்தை சக்சஸ் செய்து காட்டுகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: அடுத்த தளபதி இவர்தான்!. நமக்கே டஃப் கொடுப்பாங்க போலயே!.. புது பட ஹீரோவை கலாய்த்த வெங்கட்பிரபு..

அதற்கு கார்த்திக் நீங்களே இந்த அளவு நம்பிக்கையுடன் இருக்கும் போது எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நானே இந்த படத்தில் நடிக்கிறேன் என அதன் பிறகு நடித்தாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top