எனக்கு விஜய் போட்ட உத்தரவு! போன் பண்ணி கேட்டாரு.. கங்கை அமரன் கூறிய சீக்ரெட்

Published on: March 12, 2024
gangai
---Advertisement---

Vijay Gangai Amaran: விஜய் இப்போது கோட் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவர் சங்கர் ராஜா இசையில் படம் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அதுவும் விஜயின் அரசியல் வேகம் இன்னும் இந்தப் படத்தின் ஹைப்பை கூட்டியிருக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.

இவர்களுடன் சினேகா, லைலா போன்றோரும் நடிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பிரபுதேவா, பிரசாந்த் ,யோகிபாபு, அஜ்மல் போன்ற முக்கிய நடிகர்களும் படத்தில் இணைந்திருக்கிறார்கள். படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகி ஒரு வித எதிர்பார்ப்பை படம் பெற்றிருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னையில்தான் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அண்ணாவைப் பார்க்க முடியாமல் தலைகுனிந்த எஸ்எஸ்ஆர்..! சிவாஜியே வியந்த நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா?

சமீபத்தில்தான் யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்தார்களாம். விஜய் அரசியலுக்கு வருவது உறுதியானதில் இருந்து நாள்தோறும் விஜயை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம். ஒரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் அரசியல் என மிகவும் பிஸியாக இருக்கிறார் விஜய். கோட் படத்திற்கு பிறகு விஜய் அவருடைய 69வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

அந்தப் படத்தை இயக்கப் போவது எச்.வினோத் அல்லது தெலுங்கு இயக்குனர் ஒருவர் என பேசப்பட்டு வருகிறது. இருவரிடமும் கதை கேட்ட விஜய் இரு கதைகளும் பிடித்துப் போனதாக கூறியிருக்கிறாராம். விரைவில் அவருடைய 69வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: வாடிவாசலில் இவர்தான் நடிக்கிறாரா? வைரலாகும் புகைப்படம்.. சூர்யாவையே மிஞ்சிட்டாரே

இதற்கிடையில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் அவ்வப்போது கோட் படத்தை பற்றியும் விஜயை பற்றியும் பேட்டிகளில் கூறி வருகிறார். கோட் படத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறாராம் கங்கை அமரன். அந்தப் பாடல் காதல் சம்பந்தப்பட்டதா அல்லது விஜய் அறிமுகப் பாடலா? என்று நிருபர் கேட்க, அதற்கு கங்கை அமரன் இப்படி எல்லாவற்றையும் கேட்டால் எப்படி?

ஆரம்பத்திலேயே வெங்கட் பிரபுவும் விஜயும் ஒரு கட்டளை போட்டுவிட்டார்கள். தயவு செய்து படத்தை பற்றியோ அல்லது படத்தின் கதை பற்றியோ வெளியே சொல்லிவிடாதீர்கள் என்று விஜயும் வெங்கட் பிரபுவும் உத்தரவு போட்டார்கள் என கங்கை அமரன் கூறினார்.

இதையும் படிங்க: இயக்குனருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த ரஜினிகாந்த்!… அட அந்த சூப்பர் ஹிட் படமா?!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.