Connect with us

Cinema News

அஜித் இப்போ எப்படி இருக்காரு?.. ஷாலினி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. செம வைரல்!..

நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவலக்ள் வெளியாகின. ஆனால், அடுத்த நாளே தனது மகன் ஆத்விக் பள்ளியில் அஜித் தரையில் அமர்ந்திருப்பது போன்ற வீடியோக்கள் வைரலாகின.

ஆனாலும், அது புதிய வீடியோவாக இருக்காது என்றும் பழைய வீடியோ என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் விவாதங்கள் கிளம்பின. இந்நிலையில், ஷாலினி தனது கணவர் அஜித் மற்றும் மகன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அமீருக்கு அடுத்தடுத்து ஆப்பு!.. இப்போ இப்படியொரு வழக்குல மனுஷன் மாட்டிக்கின்னாரே!..

தனது மகன் ஆத்விக்கிற்கு நடிகர் அஜித் ஷூ மாட்டி விடுவது போன்ற போட்டோவை ஷால்னி ஷேர் செய்ததை பார்த்த ரசிகர்கள் நடிகர் அஜித் குமாருக்கு எதுவும் ஆகவில்லை என்றும் அவர் பூரண நலமாகவே எப்போதும் போல ஹேப்பியாக இருக்கிறார் என சந்தோஷமடைந்துள்ளனர்.

நடிகர் அஜித் குமார் உடல் நலத்துடன் இருக்கும் நிலையில், விரைவில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்பார் என்றே தெரிகிறது. விடாமுயற்சி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது ஆரம்பிக்கும் என்கிற கேள்விகளும், அந்த விடாமுயற்சி அப்டேட்டையும் கொஞ்சம் சொல்லிடுங்க ஷாலினி மேடம் என ரசிகர்கள் நச்சரிக்கத் தொடங்கி விட்டனர்.

இதையும் படிங்க: கமலை வளர்க்கவே கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்… அண்ணா இல்ல அப்பா.. கெத்தாக சொன்ன சாருஹாசன்!…

ஆனால், பல அஜித் ரசிகர்கள், சாரை நல்லா பார்த்துக்கோங்க மேடம், அவர் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா ஷூட்டிங் போகட்டும் ஒன்றும் அவசரமில்லை என அஜித்தின் நல விரும்பிகளாக உள்ளனர்.

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வேட்டையன் படத்துடன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top