Cinema History
பிரசாந்துக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த தியாகராஜன்!. அட இவ்வளவு நடந்திருக்கா!..
Actor: தமிழ் சினிமாவில் வாரிசு அரசியல் தற்போதைய சமயத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இதை பல வருடம் முன்னரே தொடங்கிய ஒரு சிலரில் தியாகராஜன் மகன் பிரசாந்தும் ஒருவர். நடிகராக ஜொலித்தவருக்காக தன் சினிமா வாழ்க்கையே தியாகராஜன் முடித்துக்கொண்டாராம்.
அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் தான் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் மலையூர் மம்முட்டியான் திரைப்படத்தின் வெற்றியின் மூலம் தனக்கான ஒரு அடையாளத்தை பதித்தவர் நடிகர் தியாகராஜன். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது மலையாளத்திலும் முன்னணி நடிகராக வலம் வந்தார். வில்லன் மற்றும் குணச்சித்திர பாத்திரத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தால் என் பேரே கெட்டுப் போச்சு.. தியாகராஜன் சொன்ன பகீர் தகவல்
ஆனால் அவரின் மகனும், நடிகருமான பிரசாந்த் கோலிவுட்டுக்குள் என்ட்ரியான சமயத்தில் இருந்து அவர் படிப்படியாக தன்னுடைய வாய்ப்புகளை குறைத்துக் கொண்டார். இதன் காரணம் குறித்து அவர் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் இருந்து, பிரசாந்த் தமிழ் சினிமாவுக்கு வரும்போது நான் அதிகம் வில்லன் பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தேன்.அப்படி நான் தொடர்ந்து நடித்து வந்தால் அது பிரசாந்தின் சினிமா கேரியரை வெகுவாக பாதிக்கும் என்பதால் சினிமாவில் நடிப்பதில் இருந்து படிப்படியாக ஒதுங்கினேன்.
இருந்தும் என்னுடைய நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் செக்கச் சிவந்த வானம், எமன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், எனக்கு பிரசாந்தை ஹீரோவாக்குவதில் எந்த விருப்பமும் இல்லை.
அவரை டாக்டராக விரும்பி பார்க்க நல்ல பிசிக்கில் இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக உடற்பயிற்சியில் ஈடுப்படுத்தி வந்தேன். கராத்தேவிலும் பயிற்சியில் இருந்தார். அந்த சமயம்தான் சத்யராஜ் ஒரு கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்க வந்தார். அந்த சமயத்தில்தான் எனக்கு கல்யாணமாகி மகன் இருப்பதே அவருக்கு தெரிந்தது.
இதையும் படிங்க: ஒரு வாரத்தில் படம் ரிலீஸ்!.. இளையராஜா செய்த மேஜிக்!.. வசூலை அள்ளிய விஜயகாந்த் படம்!..
உடனே விஷயம் கோலிவுட்டில் பரவியது. பிரதாப் போத்தன் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் பிரசாந்தை கேட்டு வந்தனர். ஆனால் நான் அவ்ரை டாக்டராக வேண்டும் எனக் கூறிவிட்டேன். இருந்தும் என் நண்பர் பேச்சை கேட்டு ஜோசியம் பார்த்ததில் இவர் கலைத்துறையில் தான் சாதிப்பார் என்றார்கள்.
இருந்தும் நான் டாக்டராக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
அவருக்கு நுழைவுத்தேர்வு எழுதி 3 மாசம் காலேஜில் சேர டைம் கிடைத்தது. அந்த சமயத்தில் தான் பிரசாந்தின் முதல் பட வாய்ப்பு கிடைத்தது. சரியென ஓகே சொன்னேன். அந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் ஆனது. அங்கு மாறியது பிரசாந்தின் கேரியர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.