கிணத்துக்குள் விழுந்த தவளையா தத்தளிக்கும் விஜய்சேதுபதி! அவருடைய 50வது படத்துக்கு வந்த சோதனை

Published on: March 15, 2024
sethu
---Advertisement---

Actor Vijaysethupathi: ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி இரண்டாவது நாயகனாக ஒரு சில படங்களில் நடித்து வந்தார். தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் அவருடைய கெரியரையே மாற்றிய திரைப்படம். அந்த படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக இந்த தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

விஜய் சேதுபதி படம் பெரிய அளவில் மக்களை ஈர்த்தது. அதிலிருந்து நல்ல கருத்துள்ள படங்களில் நடித்து தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். குறுகிய காலத்தில் ஒரு முன்னணி ஹீரோ அந்தஸ்தை பெற்றார்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரகுமானின் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா?.. தோட்டக்காரரிடம் கண்டிஷன் போட்ட இசைப்புயல்!..

விஜய் சேதுபதி தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்து டாப் ஹீரோவாக வலம் வந்தார்ல் அதன் பிறகு பேட்ட திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான விஜய் சேதுபதியை மக்கள் இன்னும் விரும்ப ஆரம்பித்தனர். ஹீரோவாக நடித்ததை விட வில்லன் விஜய் சேதுபதியை தான் மக்கள் விரும்பினார்கள். அதிலிருந்து அடுத்தடுத்த படங்களில் வில்லன் அவதாரம் எடுத்தார் விஜய் சேதுபதி.

விக்ரம் படத்தில் ஒரு மோசமான வில்லனாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் அன்பை பெற்றார். இதன் மூலம் பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கியது. ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. வில்லனாகவே நடித்து வந்த விஜய் சேதுபதி அவ்வப்போது ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: ரஜினிக்காக தொடர்ந்து அஜித்தை காலி செய்யும் லைகா… மீண்டும் தள்ளிப்போன விடாமுயற்சி?

ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையவில்லை. இந்த நிலையில் அவருடைய ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கின்றது. பொதுவாக நடிகர் நடிகைகளுக்கு அவர்களுடைய ஐம்பதாவது படம், நூறாவது படம் என்றால் அது ஒரு தனி ஸ்பெஷல் தான். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அதேபோல் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படமும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றது. இந்த படத்தை குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் இயக்குகிறார். பேசன் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. விஜய் சேதுபதி உடன் இந்தப் படத்தில் அனுராக் காசியப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: விஜயின் குரலுக்கு இவ்ளோ விலையா? ‘கோட்’ படத்தில் நடக்கும் பஞ்சாயத்து.. மாட்டிக்கிட்டு முழிக்கும் ஏஜிஎஸ்

இந்தப் படத்தின் திரைக்கதை தனித்துவமாக இருக்கும் என்று இயக்குனர் நித்திலன் கூறி இருக்கிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் விஜய் சேதுபதி நடிக்கும் 50 வது படமான மகாராஜா திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமம், ஓ.டி.டி உரிமம் என எதுவுமே விற்கப்படாமல் அப்படியே இருப்பதாக தெரிகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.