Connect with us

Cinema History

என்னைத் தொட்டு நடிக்காதே!.. சந்திரபாபுவிடம் சொன்ன அந்த நடிகை இவரா?..

தமிழ்சினிமா உலகில் காமெடியில் ஒரு நவீன பாணியை உருவாக்கி இளம் ரசிகர்களைக் குதூகலப்படுத்தியவர் நடிகர் சந்திரபாபு. இவரைப் பற்றியும் அவருடன் நடித்த நடிகை சாவித்திரி பற்றியும் சந்திரபாபு சகோதரர் ஜவஹர் என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…

சந்திரபாபு தான் இந்தியாவிலேயே முதன் முதலா யூடுலே சாங் பாடினார். அதற்குப் பிறகு தான் கிஷோர் குமார் எல்லாம். அந்தக்காலத்தில் முதன்முதலா பாடின போது 200 ரூபாய் சம்பளம். இப்போ எத்தனையோ ஆயிரத்துக்குச் சமம். அதிலும் போய் கிராம போனை வாங்கி வந்தார். வீட்டில் சாப்பாடு கிடையாது.

அவர் வாங்கி வந்தது எல்லாம் இங்கிலீஷ் பாட்டுகள் தான். அப்படித்தான் யூடுலே பாட்டு பாடுனாரு. அது கௌபாய் பாடுற பாட்டு. இந்தியாவுலயே முதல்ல வெஸ்டர்ன் சாங் பாடுன நடிகர் சந்திரபாபு தான். மோகனசுந்தரம் படத்துல மைடியர் ராமே எங்க அம்மா உனக்கு மாமின்னு முதல்ல இங்கிலீஷ்ல பாடுனாரு.

G.S., CB

G.S., CB

சின்னத்துரை படத்துல போனா போகட்டும்கற பாட்டுல தான் யூடுலே பாடினார். இதைப் பார்த்ததும் இயக்குனர் பிஆர்.பந்துலு கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி படத்தில் சிவாஜிக்கு பாட வைத்தார்.

மைடியர் மாமி பாட்டுக்கு சந்திரபாபு கமெண்ட் அடிச்சாராம். அந்தப் பாட்டுக்கு அவ்வளவு குண்டா ஒருத்தன் நடிச்சிருக்கான். அவனுக்கு என் குரல் தான் செட்டாகுதுன்னு சொன்னார் சந்திரபாபு. அந்தப் படத்தில நடிச்சது ஜி.சகுந்தலா. அவங்க என்னைத் தொடக்கூடாதுன்னு சந்திரபாபுவைப் பார்த்து என்னைத் தொட்டு நடிக்கக்கூடாதுன்னு சொன்னாங்க. அந்தக் காலத்துல கிறிஸ்டியன்னா சேர்க்க மாட்டாங்க. அதன்பிறகு இருவரும் சேர்ந்து பல படங்களில் நன்றாகப் பழகி நடித்து விட்டார்கள்.

இதையும் படிங்க… ஏ.ஆர்.ரகுமானின் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா?.. தோட்டக்காரரிடம் கண்டிஷன் போட்ட இசைப்புயல்!..

இவரு கிறிஸ்டியன்கறதால அவங்க அப்படி சொன்னாங்க. டி.ஆர்.மகாலிங்கத்துக்கிட்ட எடுபிடியா இருந்தவரு. கார் ஓட்ட, எங்கயாவது போய்ட்டு வரன்னு இருந்தாரு. இவர் பாடிக்கிட்டே இருந்ததைப் பார்த்த மகாலிங்கம், நல்லா பாடுறன்னு சந்திரபாபுவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top