காதல் மன்னன் படத்தில் நாயகி என்னை கொடுமைப்படுத்தினார்… சரண் சொன்ன ஷாக்கிங் தகவல்

Published on: March 15, 2024
---Advertisement---

Saran: அஜித்குமாரின் பிரபல திரைப்படமான காதல் மன்னனை இயக்கியவர் சரண். அவர் இந்த இப்படத்தில் நடிகை மானுவை எப்படி ஓகே செய்தார். அதன் பின்னர் அவருக்கு இடையில் சிக்கிக்கொண்டு பட்ட காமெடிகளையும் தன்னுடைய பேட்டி  ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

அப்பேட்டியில் இருந்து, விவேக் தான் முதலில் மானுவை கண்டுப்பிடித்தார். அதை தொடர்ந்து நாங்கள் எல்லாம் அவரை பார்க்க போனோம். அப்போ கதவை திறந்தவரே மானு தான். அங்கையே நான் அவர் தான் ஹீரோயின் தான் எனதை முடிவு செய்துவிட்டேன்.

இதையும் படிங்க: ‘தல’ன்னா அது அஜீத் மட்டும்தான்… தைரியமாக சொன்ன அந்த பிரபலம் யார் தெரியுமா?..

அவரின் அப்பாவும் கேட்டதுக்கு நோ சொல்லவில்லை. படப்பிடிப்பு தொடங்கியது மானுவுக்கு டக்கென கோவம் வரும். அவர் தமிழ்நாட்டுக்கு வந்தே 6 மாதம் தான் ஆகியது. அவரை நாங்க சினிமாவுக்கு கூட்டி வந்துவிட்டோம். இதனால் என்ன சொன்னாலும் கடுப்பாகிவிடுவார். வெயிலில் ஷூட்டிங்கிற்கு கூப்பிட்டால் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.

ஒவ்வொரு காட்சிக்குமே சண்டை போட்டு தான் நடிக்க ஆரம்பிப்பார். அவரை நடிக்க வைப்பதுக்கே அத்தனை போராட்டம் இருந்தது. அவருக்கு பரதநாட்டியம் தெரியும் என்பதால் அதுக்கு இது பாப்புலராக்க உதவும் என்றே அவரை சமாதானப்படுத்தினோம்.

மேலும், நடிக்க பழைய படங்களை போட்டு காட்டுவோம். இப்போது போல அப்போது சப் டைட்டில் எல்லாம் இருக்காது. தமிழும் சரியாக தெரியாதவர். வெறும் முக பாவனைகளை வைத்தே அந்த படங்களை பார்த்து கத்துக்கொண்டார். அதன் பின்னர் அவர் சிரிப்பில் கூட பழைய நாயகிகளை அழகாக கொண்டு வந்தார்.

மானுவுக்கு அந்த ஷெட்டில் அவ்வளவு செல்லம் இருந்தது. ஷூட்டிங்கில் வந்து கேமராவில் வந்து தன்னை அலங்கரித்து கொண்டு இருப்பார். கேமராமேன் என்னை பார்த்து கடுப்பாகி விடுவார். நான் முழிக்க வேண்டி இருக்கும். அவர் ரொம்பவே அர்ப்பணிப்புடன் நடிப்பார். உதவியாளரை வைத்து கொள்வது கூட அவருக்கு தொல்லையாகவே இருக்கும். தன்னை தானே பார்த்து கொள்ள வேண்டும் என நினைப்பார்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரகுமானின் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா?.. தோட்டக்காரரிடம் கண்டிஷன் போட்ட இசைப்புயல்!..

இந்திரனின் அழகிகளான நான்காவது பெயரான திலோத்தமாவை மானுக்கு வைத்தேன். அதன் பின்னர் அவர் பெயரே திலோத்தமாவானது. படத்தின் ஒரு பாடல் காட்சியில் அவருக்கு ஒரு ஸ்டெப் வராமல் போக மானு நான் இனிமே நடிக்க மாட்டேன் என போய் உட்கார்ந்து விட்டார். பின்னர் நான் போய் உட்கார்ந்து சமாதானம் செய்து கூட்டி வந்தேன் என்றார். அப்பேட்டியில் உடன் இருந்த மானு, அழுக சொன்னால் அழுவேன். சிரிக்க சொன்னால் சிரித்தேன். மற்றபடி எதுவும் செய்யவில்லை. எல்லா கிரெடிட்டும் சரணுக்கே தான் எனவும் கூறி இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.