Cinema History
கோபத்தில் வாட போடா என பாட்டு எழுதிய கண்ணதாசன்!.. சிவாஜிக்கு அமைந்த ஒரு சூப்பர் ஹிட் பாட்டு!..
தனது சொந்த கோபம், வாழ்க்கை, பிரச்சனை என எல்லாவற்றையும் தனது பாடல்களில் பிரதிபலித்தவர்தான் கண்ணதாசன். காதல், தத்துவம், மரணம், சோகம், கண்ணீர், விரக்தி, நம்பிக்கை, விடாமுயற்சி என மனித வாழ்வில் எல்லா உணர்வுகளையும் பாடலாக எழுதியவர் இவர். பத்திரிக்கையாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் இவர்.
துவக்கத்தில் தான் வேலை செய்த பத்திரிக்கைகளில் சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதி வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடியபோது வசனம் எழுதும் பணி கிடைத்தது. கிட்டத்தட்ட கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுத வந்த காலத்தில்தான் அவருக்கு போட்டியாக கண்ணதாசன் இருந்தார்.
இதையும் படிங்க: ஆசைப்பட்ட ஃபாரின் சரக்கு கிடைக்கலயே!.. கோபத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்..
எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன் உட்பல பல திரைப்படங்கள் கதை, வசனங்களில் பங்காற்றியிருக்கிறார். கண்ணதாசனை போல பாடல் வரிகளை எழுதும் ஒரு பாடலாசிரியர் இதுவரை பிறக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிவாஜி நடிப்பில் உருவான பாலும் பழமும் படத்திற்கு பாடல் எழுதப்போனார் கண்ணதாசன்.
அப்போது ஒரு அரசியல் கட்சியிலிருந்து விலகி இருந்தார் கண்ணதாசன். எனவே, எம்.எஸ்.வி-யிடம் போனால் போகட்டும் போடா என்கிற வரிக்கு டியூன் போட சொன்னார். ‘இப்படி மரியாதை இல்லாமல் போடா என பாட்டு எழுதினால் தவறாக நினைக்கமாட்டார்களா?’ என கேட்டார். கண்ணதாசனோ ‘போனால் போகட்டும்’ என்பதற்கு டியூன் போடு. மற்றவை பற்றி நீ யோசிக்காதே என்றார்.
இதையும் படிங்க: இதுதான் கேப்புல கெடா வெட்றதா?!. சிவாஜி படத்தில் தன்னை பற்றி பாடல்களை எழுதிய கண்ணதாசன்!..
எம்.எஸ்.வியோ விடவில்லை. ‘நீங்கள் என்னை போடா என திட்டுவது போல இருக்கிறது. இது வேண்டாம். வரியை மாற்றி சொல்லுங்கள்’ என்றார். கவிஞரோ ‘இதுதான் வரி’ என சொல்லிவி்ட்டார். அருகிலிருந்து தயாரிப்பாளர் வேலுமணி மற்றும் இயக்குனர் பீம்சிங் இருவரும் ‘பரவாயில்லை கவிஞர் சொல்லிய வரிகளுக்கே டியூன் போடுங்க’ என்றார். எனவே, அதற்கு மெட்டமைத்தார் எம்.எஸ்.வி. பாடலும் சூப்பர் ஹிட் அடித்தது.
நல்லவேளை இந்த பாடலை மிஸ் பண்ணவில்லை என மனதிற்குள் நினைத்துக்கொண்டார் எம்.எஸ்.வி. ஒருநாள் எம்.எஸ்.வியின் வீட்டு சுவரில் ஒரு லாரி மோதி சுவர் இடிந்துவிட்டது. அவரிடம் ‘என்னப்பா இப்படி பண்ணிட்டியே’ என கேட்டுக்கொண்டிருந்தார் எம்.எஸ்.வி. அப்போது அங்கே இருந்த சிறுவன் ஒருவன் ‘போனால் போகட்டும் போடா’ என பாடினான். அசந்துபோன எம்.எஸ்.வி ‘டேய் அவனை புடி’ என சொல்ல சிட்டாய் பறந்தான் சிறுவன்.