மீண்டும் பின் வாங்கிய பிரபாஸ்!.. கல்கி அவதாரம் எடுக்க இன்னும் சரியான காலம் வரலப்போல?..

Published on: March 16, 2024
---Advertisement---

நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் அடுத்ததாக பெரிய பட்ஜெட் படத்தை தான் எடுத்தே தீருவேன் என பிரபாஸுக்காக பல ஆண்டுகள் காத்திருந்தார். ஒரு வழியாக கல்கி படத்தின் படப்பிடிப்பை எடுத்து முடித்தாலும் திட்டமிட்டபடி இந்த முறை படத்தின் ரிலீஸ் நடக்காது என்றும் மீண்டும் தள்ளிப் போகும் என தகவல்கள் வெளியாகி பிரபாஸ் ரசிகர்களை பைத்தியம் பிடிக்க வைத்து விட்டது.

ஏற்கனவே சமீபத்தில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பிரபாஸ் ரசிகர்களை புரட்டி எடுத்த நிலையில், மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட கல்கி 2898 ஏடி திரைப்படம் ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போய் விடும் என லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: இப்படி நடிச்சேன்! யாரும் கை தட்டலயே!.. லால் சலாம் படப்பிடிப்பு தளத்தில் ஏமாந்து போன ரஜினி…

அப்படியே இன்னும் ஓரிரு மாதம் தள்ளிப் போய் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானால் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்துடன் கிளாஷ் விடலாம். யாரு ரியல் பான் இந்தியா ஸ்டார் என்பது தெரிந்து விடும் என அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மீண்டும் பிரபாஸ் ரசிகர்களை வம்பிழுத்து வருகின்றனர்.

பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் சலார் திரைப்படம் வெளியானது. 700 கோடி வரை அந்த படம் வசூல் ஈட்டியது. பிரபாஸ் படம் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில், சலார் படம் வெற்றிப்படமாக மாறியது.

இதையும் படிங்க: 34 வருஷமா முறியடிக்க முடியாத சாதனை!.. ராமராஜன் – இளையராஜா காம்போ இப்போ எடுபடுமா?..

இந்நிலையில், கல்கி வெளியானால் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் படத்தின் படப்பிடிப்பே முடியாத நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதமும் கல்கி வெளியாகவில்லை.

இத்தாலியில் கடைசி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து ஜூன் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.