Cinema News
அஜித் ஒரு சுயநலவாதி!. பெருசா உதவிலாம் பண்ணது கிடையாது!.. காமெடி நடிகர் பேட்டி…
தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நுழைந்தவர் அஜித். சாக்லேட் பாயாக நடிக்க துவங்கிய அஜித் ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறி, இப்போதும் மாஸ் ஹீரோவாகவும் மாறிவிட்டார். ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார், தல என்றெல்லாம் பட்டப்பெயர் வைத்தனர்.
அஜித் என்றாலே அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளமாட்டார், ரசிகர்களை சந்திக்க மாட்டார், படப்பிடிப்பு இல்லையெனில் பைக்கை எடுத்துகொண்டு எங்கேயாவது போய்விடுவார் என்பதுதான் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதேபோல், அவர் பலருக்கும் உதவி செய்திருக்கிறார். ஆனால், அது வெளியே தெரியாது எனவும் சிலர் சொல்வார்கள்.
இதையும் படிங்க: ஷூட்டிங் அப்புறம் பாப்போம்!.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்!.. ஃபோட்டோ பாருங்க!…
வாலி படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது அப்படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பைக் வாங்கி கொடுத்தார். படம் ஹிட் ஆனதும் கார் வாங்கி கொடுத்தார் என சொல்வார்கள். எஸ்.ஜே. சூர்யாவும் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒருபக்கம், மற்றவர்களுன் பாசாங்கு இல்லாமல் வெளிப்படையாக பழகுவார், பேசுவார் என்றும் சொல்வார்கள். அதோடு, அவர் ஒரு ஜென்டில்மேன் எனவும் பொதுவாக சொல்வார்கள்.
ஆனால், காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் அஜித்தை பற்றி வேறுமாதிரி சொல்லி இருக்கிறார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் அஜித்துக்கு எதிராக நிறைய பேசினார். எல்லோரும் நினைப்பது போல அஜித் பலருக்கும் உதவி செய்தது எல்லாம் கிடையாது. சிலருக்கு மட்டுமே உதவி செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: எல்லாமே வேஷம்.. அஜித் மோசமான ஆளு!.. எனக்கு பிடிக்காது!.. பகீர் கிளப்பும் பிரபல நடிகர்…
அவருடைய மேக்கப் மேனுக்கு பைக் வாங்கி கொடுத்தார். ஏனெனில் அப்போதுதான் அவர் சீக்கிரமாக படப்பிடிப்பு தளத்திற்கு வருவார் என்கிற சுயநலம் இருக்கிறது. 100 கோடி சம்பளம் வாங்கிறார் என சொல்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் லைட்மேன்கள் முதல் பலரும் வேலை செய்கிறார்கள். அவர்கள் மிகவும் கஷ்டமான வேலைகளை செய்பவர்கள்.
ஒருவருக்கு ஒரு லட்சம் என 100 பேருக்கு கொடுக்கலாம். ஆனால், இதையெல்லாம் அஜித் எப்போதும் செய்தது கிடையாது. இதனாலேயே எனக்கு அவரை பிடிக்காது. நல்லவர் என்று ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறார். அதற்காக இணைய கூலிகள் வேலை செய்கிறார்கள். இதுதான் உண்மை’ என டெலிபோன் ராஜ் கூறியிருக்கிறார்.