ஷூட்டிங் அப்புறம் பாப்போம்!.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்!.. ஃபோட்டோ பாருங்க!...

தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்களில் அஜித் வித்தியாசமானவர். எப்படி எனில் இவருக்கு ரசிகர் மன்றமே கிடையாது. ஆனால், இவரின் படங்கள் வசூலை வாரிக்குவிக்கும். மற்ற நடிகர்களை போல ரசிகர்களை சந்திப்பது இல்லை. ஆனாலும், இவருக்கு ரசிகர்கள் குறையவில்லை.

வீடு, படப்பிடிப்பு தளத்தை விட்டால் இவரை வேறு எங்கும் பார்க்க முடியாது. அப்படி பார்க்க வேண்டுமெனில் குடும்ப நிகழ்வு, மகன் படிக்கும் பள்ளி அல்லது பைக்கை எடுத்துகொண்டு எங்கேயாவது சுற்றிக்கொண்டிருப்பார். இவருக்கு என பைக் கேங் ஒன்று உள்ளது. எப்போதெல்லாம் இடைவெளி கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்களுடன் சேர்ந்து பைக்கில் ஊர் சுற்ற போய்விடுவார்.

இதையும் படிங்க: சிங்கம்லாம் சும்மா!. வேறமாதிரி சீறுராரே சூர்யா!.. அட்டகாசமான கங்குவா டீசர் வீடியோ…

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு கூட பல நாட்கள் பல நாடுகளிலும் சுற்றிகொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வைரலானது. அதன்பின் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அசர்பைசான் நாட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். ஆனால், திடீரென இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இப்படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த முடிவு என சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த யூட்யூப் பிரபலமா? ஃபன் கியாரண்டி தான் போல!

அதன்பின் அஜித் சென்னை வந்தார். மேலும், அவரின் காதுக்கு அருகே ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டதும் ‘இது ஒரு சாதாரண அறுவை சிகிச்சைதான்’ என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்தார். அதோடு, மகன் ஆத்விக் படிக்கும் பள்ளியில் மனைவி ஷாலினி அஜித்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படமும் வெளியானது.

இந்நிலையில், தற்போது மீண்டும் பைக்கில் ஊர் சுற்ற கிளம்பிவிட்டார் அஜித். இது தொடர்பான புகைப்படம் ஒன்றை சுரேஷ் சந்திரா டிவிட்டரில் பகிர்ந்து ‘ஃபிட் மற்றும் சுறுசுறுப்பு... ஏகே டிராக்கு மீண்டும் திரும்பிவிட்டார்’ என பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

ajith

 

Related Articles

Next Story