சிங்கம்லாம் சும்மா!. வேறமாதிரி சீறுராரே சூர்யா!.. அட்டகாசமான கங்குவா டீசர் வீடியோ...

சூர்யாவின் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். மேலும், திஷா பத்தானி, ரெட்டின் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி பாபு என பலரும் நடித்திருக்கிறார்கள்.

இதுவரை சூர்யா இதுபோன்ற வேடத்தில் நடித்தது இல்லை. ஹாலிவுட்டில் ஸ்டைலில் பல நூறு வருடங்களுக்கு முன் நடக்கும் கதையை எழுதி இருக்கிறார் சிவா. இந்த படத்தில் சூர்யாவின் கெட்டப்பை பார்க்கும் போது இப்படம் சூர்யா ரசிகரக்ளுக்கு மாபெரும் ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த யூட்யூப் பிரபலமா? ஃபன் கியாரண்டி தான் போல!

இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஹிஸ்டாரிக் பீரியட் படம் வந்தது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சூர்யா ஒருபக்கம் ஜெய்பீம், சூரரைப்போற்று போன்ற கதையம்சம் கொண்ட படங்களிலும், ஒருபக்கம் மசலா படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், கங்குவா போன்ற கதையில் அவர் நடித்தது இல்லை.

kanguva

கங்குவா திரைப்படம் பல மொழிகளிலும் உருவாகி வருகிறது. பிரபாஸுக்கு ஒரு பாகுபலி அமைந்தது போல சூர்யாவுக்கு இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் இந்த படத்தின் டீசர் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதில் அசத்தலான ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

இந்த டீசரில் உள்ள பல காட்சிகளிலும் சூர்யா சிங்கம் போல உறுமுகிறார். அதோடு, அவரின் கெட்டப்பும் செம மாஸாக இருக்கிறது. மேலும், வில்லனாக வரும் பாபி தியோலும் அட்டகாசமான லுக்கில் மிரட்டுகிறார். ஏற்கனவே அனிமல் படத்தில் வில்லனாக வந்து மிரட்டியிருந்தார். கங்குவா படத்தின் இந்த டீசர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Related Articles
Next Story
Share it