குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த யூட்யூப் பிரபலமா? ஃபன் கியாரண்டி தான் போல!
Cookwithcomali: புதுப்பொலிவுடன் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
குக்கிங் ஷோவில் புதுமை காட்டி வெற்றி பெற்ற ஷோ தான் குக் வித் கோமாளி. செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் நடுவர்களாக இருக்க ரக்ஷன் இதை தொகுத்து வழங்கி வந்தார். பிரபல போட்டியாளர்களுடன் கோமாளிகளாக சின்னத்திரை பிரபலங்கள் இறங்கி செய்யும் அதகளமே நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் புகழை பெற்று தந்தது.
இதையும் படிங்க: சினிமா உலகில் கதைக்குப் பஞ்சம்… தங்கர்பச்சானின் அழகி படம் திரும்பவும் ரிலீஸ்… இதுதான் காரணமா..?
அந்த நிலையில், வெங்கடேஷ் பட் நான் அந்த நிகழ்ச்சியில் இல்லை என அறிவித்தார். அவர் அறிவித்த சில மணிநேரங்களில் தாமுவும் நிகழ்ச்சியில் இருந்து விலகி வேறு நிகழ்ச்சியில் சந்திக்க இருப்பதாக கூறி இருந்தார். ஆனால் திடீரென அவர் பதிவை நீக்கி ஷாக் கொடுத்தார். இதற்கு வெங்கடேஷ் பட்டே கண்டனம் கூட தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூன்றே வயதில் தேசிய விருது பெற்ற ஷாமிலி… சினிமாவை விட அந்த விஷயத்தில்தான் ஆர்வமாம்..!
மீடியா மேசான் டீமும் விஜய் டிவியில் இருந்து விலகியது. இதனால் குக் வித் கோமாளியே இல்லையோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெங்கடேஷ் பட்டுக்கு பதில் பிரபல சமையல்கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து இருக்கிறார்.
தாமுவுடன் இவர் இணைந்து இருக்கும் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், நிகழ்ச்சியில் போட்டியாளராக யூட்யூப் பிரபலம் இர்பான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, விடிவி கணேஷ் இணைய இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நடிகை திவ்யா துரைச்சாமியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.