Connect with us
Azhagi

Cinema History

சினிமா உலகில் கதைக்குப் பஞ்சம்… தங்கர்பச்சானின் அழகி படம் திரும்பவும் ரிலீஸ்… இதுதான் காரணமா..?

2002ல் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான படம் அழகி. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதற்குக் காரணம் அழகியலுடன் கூடிய கதை தான். இந்தப் படம் தற்போது திரும்பவும் ரிலீஸாகிறது. இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாமா…

அழகி படம் தமிழ்சினிமா உலகில் ஒரு அழகியலைப் படம்பிடித்துக் காட்டியது. 2002ல் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மறுவெளியீடாகிறது என பார்த்திபன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஏன் இவ்வளவு வரவேற்பு? இந்தக் கதையைக் கடந்து செல்லாதவர்களே இருக்க முடியாது. பள்ளி வயதில் மலர்ந்த காதலை வெகு அருமையாகச் சொல்லி இருப்பார். இருவரும் சூழ்நிலை காரணமாக சேர முடியாமல் போனாலும் வளர்ந்த பருவத்தில் வெவ்வேறு இடங்களில் திருமணமானதும் அதன்பிறகு இவர்கள் சந்திக்கும் இடங்களிலும் நெஞ்சைத் தொட்டு இருப்பார் தங்கர்பச்சான். படத்தில் நந்திதாவின் நடிப்பு வெகு அருமையாக இருக்கும்.

Azhagi movie

Azhagi movie

அதிலும் இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையில் அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட். பாட்டுச் சொல்லி, ஒளியிலே தெரிவது என்ற பாடல்கள் எல்லாம் ரசிகர்களுக்கு விருந்து. கடலூர், விழுப்புரம், பண்ருட்டி பகுதிகளில் உள்ள எளிய மக்களின் வாழ்க்கையைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது.

இந்தப் படம் மறுபடியும் வெளியாகிறது. இதைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்ட காரணம் இதைக் கடந்து செல்லாதவர்களே இருக்க முடியாது என்பதால் தான். இன்றைய சினிமா உலகில் கதைக்குப் பஞ்சம்…

இதுபோன்ற ஆன்மாவைக் கரைய வைக்கும் படங்களின் பற்றாக்குறையால் இந்த அழகி படம் ரீரிலீஸாகிறது என்றே சொல்ல வேண்டும். என்ன டெக்னாலஜி இருந்தாலும் மொத்தக் கலைகளின் தொகுப்பு தான் சினிமா. இதற்கு ஆதாரமாக இருப்பதே அன்பு தான். இந்த அன்பைப் பரிமாறுவதில் தான் இந்தக் கலைகளே இயங்குகிறது.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளரும், சினிமா விமர்சகருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top