Cinema History
இவருக்கு பாட்டு எழுத வராது!.. ஊருக்கு போக சொல்லுங்க!.. வாலியை நக்கலடித்த இசையமைப்பாளர்!…
திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களுக்கு பாடல் எழுதி பாடலாசிரியராக கண்ணதாசன் கோலோச்சி வந்தபோதே அவருக்கு போட்டியாக களமிறங்கி முத்திரை பதித்தவர் கவிஞர் வாலி. வாலி எழுதிய பல பாடல்களை பலரும் கண்ணதாசன் எழுதியதாக கூட நினைத்தார்கள்.
கண்ணதாசனை போலவே வாலியும் தாலாட்டு, காதல், பிரிவு, சந்தோஷம், துக்கம், தத்துவம் என பல வெரைட்டியான பாடல்களை எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆருடன் கண்ணதாசனுக்கு அரசியல்ரீதியாக மோதல் ஏற்பட்டபோது எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து வாலியே பாடல்களை எழுதினார்.
இதையும் படிங்க: அஜித்தின் சூப்பர்ஹிட் பாடல்… ஹீரோக்கு கங்கை அமரன்… ஹீரோயினுக்கு வாலி.. என்னங்க இப்படி?
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி போன்ற 60ஸ் நடிகர்களுக்கும், ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் சத்தியராஜ் பிரபு, மோகன் போன்ற 80ஸ் நடிகர்களுக்கும், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் போன்ற 90 நடிகர்களுக்கும் பாடல்களை எழுதி அசத்தியவர்தான் வாலி. அதனால்தான் அவரை வாலிபக் கவிஞர் என அழைத்தார்கள். வாலிக்கு வாய்ப்புகள் சுலபமாக கிடைத்துவிடவில்லை.
சென்னைக்கு பாட்டெழுத வாய்ப்பு தேடி வந்த வாலி சென்னையில் உள்ள அவரின் நண்பர் மற்றும் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் தங்கியிருந்த அறையில் தங்கி இருந்தார். அப்போது அவருடன் தங்கியிருந்தவர் நடிகர் நாகேஷ். அவர் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்.
ஒருநாள், வாலியை கோபாலகிருஷ்ணன் ஒரு இசையமைப்பாளரிடம் அழைத்து சென்றார். ஒரு படத்தில் வாலி பாட்டு எழுதி இருப்பதாக சொன்னார். என்ன படம், என்ன பாடல் என விசாரித்த இசையமைப்பாளரிடம் விபரம் சொல்லப்பட்டது. அதன்பின் தான் கவிதைகள் எழுதி வைத்திருந்த நோட்டு புத்தகத்தை அவரின் கையில் கொடுத்தார் வாலி.
இதையும் படிங்க: கோபத்தில் கங்கை அமரன் என்னை பழிவாங்கினார்!.. டைம் பாத்து அடிச்ச கவிஞர் வாலி!..
அதை வாங்கி புரட்டிப்பார்த்த அந்த இசையமைப்பாளர் கோபாலகிருஷ்ணனை தனியே அழைத்து சென்று ‘உங்கள் நண்பரை திருச்சியில் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட்டு விட வேண்டாம் என சொல்லுங்கள். சினிமாவுக்கு பாட்டெழுதும் அளவுக்கு அவருக்கு திறமை இல்லை’ என சொல்லி அனுப்பிவிட்டார்.
அறைக்கு திரும்பி கொண்டிருந்தபோது ‘அவர் என்ன சொன்னார்?’ என வாலி கேட்க அதை அப்படியே சொன்னார் கோபாலகிருஷ்ணன். காலம் ஓடியது. வாலிக்கு திறமையில்லை என சொன்ன அந்த இசையமைப்பாளரின் இசையில் வாலி எழுதிய பாடல் 4 ஆயிரத்திற்கும் மேல். அந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.