Connect with us
Kamal, SPB

Cinema History

என்னால பாட முடியாது!. கமலால் மட்டும்தான் முடியும்!.. எஸ்.பி.பி.யையே மிரள வைத்த பாடல் எது தெரியுமா?..

கமல்ஹாசன் ஒரு பன்முகக் கலைஞர் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். நடிகர், டான்சர், தயாரிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், இயக்குனர், பாடகர்… இப்போது அரசியல்வாதி. இவற்றில் இவர் பாடகராக இதுவரை 100 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை இளையராஜாவில் தான் என்றால் மிகையில்லை. அதனால் அத்தனை பாடல்களுமே சூப்பர்ஹிட் தான்.

ஞாயிறு ஒளிமழையில்… கமல் தன் சொந்தக்குரலில் பாடிய முதல் பாடல் இதுதான். கண்மணி அன்போட, சொன்னபடி கேளு, நீ பார்த்த பார்வைக்கொரு, சுந்தரி நீயும் என அவரது பாடல்கள் எல்லாமே அற்புதம் தான். அந்த வகையில் அவர் பாடும் பாடல்களில் பலவற்றுள் ஒரு வித நய்யாண்டியும் நக்கலும் இருக்கும். அதனால் இசைக்கச்சேரிகளில் பெரும்பாலும் கமல் பாடிய பாடல்களைப் பாடத் தயங்குவார்கள். அப்படியே பாடினாலும் அது கமல் பாடியதைப் போல சிறப்பாக இருக்காது.

Singaravelan

Singaravelan

சமீபத்தில் அவரது குணா படமும், அவர் பாடிய கண்மணி அன்போட பாடலும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மூலம் மீண்டும் தமிழகம், கேரளா முழுவதும் வலம் வந்தது. இது எங்களோட காதல் பாடல் என்று கமலும் பெருமையாகச் சொல்லி இருக்கிறார்.

கமல் ரொம்பவும் ரிஸ்க் எடுத்துப் பாடிய பாடல் ஒன்று உள்ளது. அது சிங்காரவேலன் படத்தில் இடம்பெற்ற ‘போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மனி’ . இந்தப் பாடலைப் போல இதுவரை எந்தப் பாடகர்களும் பாடியிருக்க மாட்டார்கள். பாடல் முழுக்க முழுக்க உச்சஸ்தாயியில் பாடியிருப்பார். அதாவது இந்தப் பாடலை உன்னிப்பாகக் கவனித்தால் தான் தெரியும்.

இதையும் படிங்க… காதலிக்காதவரையும் காதல் பித்து பிடிக்க வைக்கும் வாலியின் வரிகள்… பாடல் இடம்பெற்ற படம் இதுதான்!

குரல் முழுவதும் அடிவயிற்றில் இருந்து வெளிவரும் வகையில் பாடப்பட்டு இருக்கும். அதே சமயம் பாடலைக் கத்தியும் பாட வேண்டும். சத்தமும் அதிகமாக வரக்கூடாது. என்னடா இது என்று கேட்கிறீர்களா? பாடலை ஒருமுறை கேளுங்கள். அப்போது தான் அதன் அருமை புரியும்.

இந்தப் பாடல் குறித்து பிரபல பின்னணிப்பாடகரும், பாடுவதில் ஜாம்பவானுமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இவ்வாறு சொல்கிறார். இந்தப் பாடலின் மெட்டு உச்ச சுருதியில் இருக்கிறது. எனது குரல் அந்த இடத்தைத் தொடாது. கமல் திறம்படச் செய்வார் என்று அவரே கூறினாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top