Cinema News
பயோபிக் படத்துக்கு இளையராஜாவின் சம்பளம் இதுதான்!. இந்த விஷயத்துல அவர் செம கறாரு!…
இளையராஜா சில விஷயங்களில் விட்டுக்கொடுத்தாலும் சம்பள விஷயத்தில் செம கறாராக இருப்பார் என திரையுலகில் சொல்வார்கள். சில படங்களுக்கு சம்பளமே வாங்காமல் கூட இசையமைத்திருக்கிறார். பி.வாசுவும், சந்தானபாரதியும் இணைந்து பாரதி வாசு என்கிற பெயரில் இயக்கிய ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்திற்கு இளையராஜா சம்பளமே வாங்கவில்லை.
இப்படி பல படங்களில் அவர் பலருக்கும் உதவி செய்திருக்கிறார். அதேநேரம், வாங்க வேண்டும் என வந்துவிட்டால் சம்பளத்தை கறாராக வாங்கிவிடுவார். சம்பளத்தை குறைத்து பேசினால் அதிக கோபம் வரும் அவருக்கு. இதனாலேயே பல படங்களுக்கு இசையமைக்க மறுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: போஸ்டரிலே இவ்வளவு குழப்பமா?!. சரியா வருமா இளையராஜா பயோபிக்?.. ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..
பாட்ஷா படம் உருவான போது அவருக்கு ஒரு சம்பளம் பேசப்பட்டது. அதனால் இந்த சம்பளத்திற்கு நான் இசையமைக்க மாட்டேன் என மறுத்தார் இளையராஜா. ரஜினியை போனில் அவரை தொடர்பு கொண்டு பேசிய போது ‘உங்கள் சம்பளத்தில் நான் தலையிட்டு இருக்கிறேனா?’ என சொன்னவர்தான் ராஜா. அதன்பின், இளையராஜா பக்கம் ரஜினி போகவே இல்லை.
அதோடு, தனது பாடலை யாரும் பயன்படுத்தினால் வழக்கும் போடுவார் இளையராஜா. அவரின் நெருங்கி நண்பர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என நோட்டிஸும் அனுப்பினார். இதனால்தான் ராஜா – எஸ்.பி.பி இடையே உறவில் விரிசல் விழுந்தது.
இதையும் படிங்க: குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் சம்பளம் இத்தனை கோடியா?!.. 20 கோடிக்காக தயாரிப்பாளரை மாற்றிய ஏகே…
இப்போது, அவரின் வாழக்கை கதை உருவாகப்போகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்க இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் போஸ்டரும் நேற்று வெளியானது. இந்த படத்தில் இளையராஜா ஒரு பங்குதாரர் என்றாலும் அவரின் பிஏ ஸ்ரீராம் பக்திசரன் பேரில்தான் படம் தயாரிக்கப்படுகிறது.
இப்படத்திற்கு 2 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். எனவே, லாபத்தில் ஸ்ரீராமுக்கு 40 சதவீதம், இரண்டு தயாரிப்பாளர்களுக்கு தலா 30 சதவீதம் என பேசப்பட்டிருக்கிறதாம். அதோடு, இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பதால் அதற்கு தனி சம்பளம் கொடுக்கப்படவுள்ளது. எப்படி பார்த்தாலும் இந்த படம் ராஜாவுக்கு நல்ல லாபத்தை பெற்றுத்தரும் என சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.