குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் சம்பளம் இத்தனை கோடியா?!.. 20 கோடிக்காக தயாரிப்பாளரை மாற்றிய ஏகே...

சினிமாவில் எத்திக்கிஸ் அதாவது தொழில் தர்மம் என்பதெல்லாம் 70,80களோடு காணாமல் போய்விட்டது. இயக்குனருக்காக படம் நடிப்பது, தயாரிப்பாளருக்காக படம் நடிப்பது என அப்போது நடிகர்கள் பல உதவிகளை செய்தனர். ஜெய்சங்கர், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் பணமே இல்லாதவர்களையே தயாரிப்பாளர் ஆக்கி இருக்கிறார்கள்.

அதாவது நடிகர், நடிகர்கள் சம்பளம் இல்லாமல் நடிக்க வேண்டும். படம் வியாபாரம் ஆகி பணம் வந்தவுடன் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு விடும். இப்படி பலமுறை பலருக்கும் உதவி செய்திருக்கிறார் நடிகர் ஜெய்சங்கர். ஆனால், அவருக்கு பின் ஒரு நடிகர் கூட அதை செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: அஜித்துக்கு வில்லனாகும் விஜய் அப்பா… புதுக்கூட்டணியால இருக்கு! ஆச்சரியத்தில் ரசிகர்கள்

விஜயகாந்த் போன்ற சில நடிகர்கள் மட்டுமே கஷ்டப்படும் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளருக்காக படம் நடித்து கொடுத்தார்கள். ஆனால், இப்போது அப்படி ஒருவர் கூட இல்லை. எந்த தயாரிப்பாளர் அதிக சம்பளம் கொடுக்கிறாரே அவருக்கு கால்ஷீட் கொடுக்கும் நிலை உருவாகி விட்டது.

அதுவும், ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் சம்பளம் ரூ.100 கோடியை தாண்டி சென்று சில வருடங்கள் ஆகிவிட்டது. விஜய் சம்பளத்தை ஏற்றினால் அவரின் போட்டி நடிகராக கருதப்படும் அஜித்தும் சம்பளத்தில் சில கோடிகள் ஏற்றிவிடுகிறார். விஜய் இப்போது 200 கோடியை நெருங்கிவிட்டார்.

இதையும் படிங்க: காட்டுக்குள் அஜித் என்னலாம் பண்றாரு பாருங்க!.. விடாமல் துரத்தும் விடாமுயற்சி நடிகர்!.. செம பிக்ஸ்!

சும்மா இருப்பாரா அஜித்!.. அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு இவரின் சம்பளம் 163 கோடி என சொல்லப்படுகிறது. அதற்கு முன் விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் அஜித் நடிப்பதாக இருந்தது. அதற்குதான் இயக்குனர் வெற்றிமாறன் பெயர் அடிபட்டது. அதற்கு அஜித்திற்கு பேசப்பட்ட சம்பளம் 143 கோடி.

ஆனால், தெலுங்கு பட தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் 20 கோடி சேர்த்து கொடுப்பதாக சொல்லவே அஜித் அவர்களுக்கு டிக் அடித்துவிட்டார் என சொல்லப்படுகிறது. விஜயை போல 200 கோடியை விரைவில் நெருங்க வேண்டும் என்பதுதான் அஜித்தின் கோல் எனத் தெரிகிறது.

 

Related Articles

Next Story